விஜயதசமி விழாவில் சொதப்பிய அபிஷேக்... இன்சல்ட் செய்யப்படுவதாக வருத்தப்பட்ட சின்னப்பொண்ணு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜயதசமி விழாவில் அபிஷேக் இன்சல்ட் செய்வதாக சின்னப்பொண்ணு வருத்தப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் விஜய் தசமியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தாமரை செல்வி தலைமையில் ஹவுஸ்மேட்டுகள் இணைந்து நாடகம் நடத்தினர்.
இதனை பிரியங்கா தொகுத்து வழங்கினார். இந்த நாடக நிகழ்ச்சிக்கு அபிஷேக் பக்க வாத்தியம் வாசித்தார்.

இசையின் கானா பாடலுடன் ஓபனிங்
நிகழ்ச்சியின் தொடக்கமாக தொகுப்பாளரான பிரியங்கா, இசைவாணியை பக்தி கானா பாடலை பாட அழைத்தார். இசைவாணியும் வந்து கானா பாடலை பாடிவிட்டு சென்றார். அதன் பிறகு நாடகத்தின் கோமாளி வந்து ஓபனிங் கொடுத்து தனது கதையை ஆரம்பித்தார்.

அபிஷேக்கால் வருத்தப்பட்ட சின்னப் பொண்ணு
அப்போது அபிஷேக் பிரியங்காவிடம் ஏதோ சொல்ல பின்னர் சின்னப்பொண்ணு முந்தி முந்தி விநாயகனே பாடலை பாடினார். பாடலை பாடி விட்டு கார்டன் ஏரியாவில் போய் அமர்ந்தார். அப்போது தான்தான் முதலில் பாடுகிறேன் என்று கூறியும் அபிஷேக் தன்னை பாட விடாமல் இன்சல்ட் செய்து விட்டதாக வருத்தப்பட்டார்.

என் மேல எந்த தப்பும் இல்ல
இதனை தொடர்ந்து வந்த பிரியங்கா, உங்களின் பர்ஃபாமன்ஸ் இருப்பது எனக்கு தெரியாது என்று கூறினார். நான் கேட்ட போது கூட யாரும் சொல்ல வில்லை என்றும் கூறி இதில் தன் மீது எந்த தவறும் இல்லை என்று தெளிவு படுத்தினார். இதைத்தொடர்ந்து சின்னப்பொண்ணுவிடம் வந்த அபிஷேக் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார்.

சின்னப் பொண்ணு புறக்கணிப்பு - நெருடல்
ஆனால் சின்னப்பொண்ணு மன்னிப்பெல்லாம் கேட்காதீர்கள், அதெல்லாம் ஒன்றும் இல்லை.. வேண்டாம் என பெருந்தன்மையாக கூறி விட்டார். பிக்பாஸ் வீட்டின் மூத்த பெண்மணி, நாட்டுப்புற பாடகியான சின்னப்பொண்ணுவுக்கு விஜய தசமி விழாவில் புறக்கணிக்கப்பட்டது பார்வையாளர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தியது.

சொதப்பல் ஷோ - ஐபிஎல் பார்க்கலாம்
சிலர் நாட்டுப்புற பாடலுக்கும் கானா பாடலுக்கும் இடையே கோல்டு வார நடப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சிலர் இந்த சொதப்பல் ஷோவை பார்ப்பதற்கு பதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை மேட்சை பார்க்கலாம் என பதிவிட்டு ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











