எல்லோரையும் நாமினேட் செய்த பிக்பாஸ்... நிரூப்பை கழுவி ஊற்றி முதல் ஆளாய் சேவ் ஆன சிபி!
சென்னை: அனைத்து போட்டியாளர்களையும் பிக்பாஸ் நாமினேட் செய்த நிலையில் அடித்து பேசிய சிபி முதல் ஆளாய் சேவ் செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் எவிக்ஷனுக்கான புராசஸ் நேற்று நடைபெற்றது.
இதில் லிவிங் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பவுலில் ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்யும் ஒரு நபரின் பெயரை எழுதி போட வேண்டும் என்றார் பிக்பாஸ்.

அனைவரையும் நாமினேட் செய்த பிக்பாஸ்
இதனை ஹவுஸ்மேட்ஸ் ஃபாலோ செய்தனர். அப்போது பேசிய பிக்பாஸ் இந்த வாரம் அனைத்து ஹவுஸ்மேட்டையும் தான் நாமினேட் செய்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய பிக்பாஸ், இந்த வாரம் முதல் ஃபினாலே ரேஸ் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் கொடுக்கப்படும் டாஸ்க்கில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ரேங்க் டாஸ்க்
இதனை தொடர்ந்து ஃபினாலே ரேஸின் முதல் டாஸ்க்காக ரேங்க் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்காக கார்டன் ஏரியாவில் 1 முதல் 10 வரை எழுதப்பட்ட படிக்கட்டு போன்ற புராப்பர்ட்டியும், தரையில் 11 என்று எழுதப்பட்டும் இருந்தது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்கான ரேங்கின் அடிப்படையில் நின்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆர்க்யூ செய்த சிபி
இதனை தொடர்ந்து முதல் இடத்தை தனக்கு முடிவு செய்து கொண்ட சிபி, நம்பர் ஒன் இடத்தில் நின்று கொண்டார். தொடர்ந்து நம்பர் ஒன் இடத்திற்கு போட்டி போட்ட ஹவுஸ்மேட்டுகளிடம் அடித்துப்பேசிய சிபி அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதில் முதலாவதாக பேசிய நிரூப்பிடம் உனக்கு தைரியம் இல்லை என்று ஆர்க்யூ செய்த சிபி, நம்பர் ஒன் இடத்தில் நிற்க உனக்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.

சூடு சொரணை எதுவுமே இல்லை
தொடர்ந்து பேசிய சிபி, அரசியல் டாஸ்க்கில் சொல்லாமல் எதிர்க்கட்சிக்கு ஒட்டு போட்டதிலேயே அவருடைய தைரியம் தெரிந்ததாகவும், இதன் மூலம் நிரூப்புக்கு தைரியம் மட்டும் இல்லை நேர்மையும் இல்லை என்றும் கூறினார். மேலும் கழுவி ஊற்றிய போதும் சிரித்துக் கொண்டே இருந்தாய் இதன்மூலம் சூடு சொரணை எதுவுமே இல்லை என்று கூறியும் விளாசினார்.

காப்பாற்றப்பட்ட சிபி
அடுத்து பேசிய அக்ஷராவிடமும் மல்லுக்கு நின்ற சிபி, அவரையும் நீ டாஸ்க்கை எல்லாம் சரியாக செய்வேன் என்று தயவு செய்து சொல்லாதே என்று வாயடைக்க வைத்தார். இதேபோல் அமீரிடமும் ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கட்டினார் சிபி. தொடர்ந்து ராஜுவிடமும் நம்பர் ஒன் இடத்தில் நிற்க தனக்குதான் தகுதி இருப்பதாக கூறிய சிபி கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் அதே ரேங்கில் நின்றார். இதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே ரேஸ் முதல் டாஸ்க்கில் வெற்றி பெற்ற சிபி இந்த வார எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார்.


Click it and Unblock the Notifications











