கெட்ட வார்த்தை பேசிய சிபி... கடுப்பாகி கண்ணாடியை அடித்த அக்ஷரா.. தரம் தாழ்ந்து போகும் பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிபி கெட்ட வார்த்தை பேசியதால் கடுப்பான அக்ஷரா யாரிடம் என்ன பேசுகிறாய் என கேட்டு செம டென்ஷன் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் முதல் முறையாக ஹவுஸ்மேட்ஸ் மற்ற ஹவுஸ்மேட்ஸுக்காக விளையாடினார்கள். இதில் யார் வெற்றி பெற வேண்டும், யார் தோற்க வேண்டும் என போட்டியாளர்களே முடிவு செய்து கொள்வதாக இருந்தது.

எல்லை மீறிய நிரூப்
இதனால் போட்டியாளர்கள் தங்களுக்குள்ளேயே டீல் போட்டுக் கொண்டனர். நிரூப் ஐக்கி பெர்ரியுடன் டீல் வைத்துக் கொண்டார். இதுபோல் வருணும் அக்ஷராவும் டீல் வைத்து விளையாடினார்கள். ஆனால் இப்போட்டியில் நிரூப் கொஞ்சம் எல்லை மீறியதாக தெரிந்தது.

ஓடவிடாமல் பிடித்து
சக போட்டியாளர்களை ஓட விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டார் நிரூப். தடுக்கலாம் ஆனால் ஓட விடாமல் பிடித்துக்கொள்வது தவறு என எதிர்ப்பு எழுந்தது. வருணையும் அக்ஷராவையும் விளையாட விடாமல் பிடித்துக் கொண்டார் நிரூப். இதனால் நீ இப்படி பிடிப்பது தவறு என அக்ஷரா நிரூப்பிடம் வாக்குவாதம் செய்தார்.

கெட்ட வார்த்தை பேசிய சிபி
அப்போது சம்பந்தமே இல்லாமல் கூடாரத்திற்குள் வந்த சிபி, பால் கறக்கும் டாஸ்க்கின் போது சம்பவத்தை சுட்டிக்காட்டி நிரூப் செய்தது சரிதான் என அக்ஷராவிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினார் சிபி.

கெட்ட வார்த்தை பேசிய சிபி
அப்போது சம்பந்தமே இல்லாமல் கூடாரத்திற்குள் வந்த சிபி, பால் கறக்கும் டாஸ்க்கின் போது சம்பவத்தை சுட்டிக்காட்டி நிரூப் செய்தது சரிதான் என அக்ஷராவிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினார் சிபி.

யார்க்கிட்ட என்ன பேசுற அறிவில்லையா?
இதனால் கடுப்பான அக்ஷரா, யாருக்கிட்ட என்ன பேசுற? என்ன வார்த்தை பேசுற? அறிவில்லையா என கேட்டு கத்தினார். பின்னர் இது போன்று யாரும் என்னிடம் பேச முடியாது என கத்தி ஆவேசப்பட்ட அக்ஷரா கூடாரத்தில் இருந்த கண்ணாடியிலும் அடித்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

நெத்தியடி கேள்வி
ஆனால் அதன்பிறகு ஸ்மோக்கின் ஏரியாவுக்கு சென்ற சிபி, தான் அந்த வார்த்தையை அக்ஷராவிடம் பயன்படுத்தவில்லை என்று பிரியங்காவிடம் பேசினார். அதற்கு பிரியங்காவோ நெத்தியடி கேள்வியாக நீ அங்கு சென்றிருக்கவே தேவையில்லை என்று கூறினார்.

தரம் தாழ்ந்து
ஏற்கனவே டாஸ்க்கில் இருந்து வெளியேறிய சிபி, தேவையே இல்லாமல் அக்ஷரா பிரச்சனையில் தலையிட்டார். தேவையில்லாமல் வார்த்தையையும் விட்டார் சிபி. இதனை பார்த்த ரசிகர்கள், சிபி பேக்கேஜ் வைத்திருப்பதாகவும், பிக்பாஸின் நிகழ்ச்சி நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து போவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











