பிக்பாஸ் வீட்டில் நடந்த ஃபேஷன் ஷோ... கண்ணாடி அணிந்து கலக்கல் வாக் போன ஹவுஸ்மேட்ஸ்.. வின்னர் யாரு?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் லென்ஸ் கார்ட் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் போட்டியாளர்கள் ஒய்யார நடைபோட்டனர்.

சனிக்கிழமை என்பதால் இன்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த வாரம் முழுக்க நடந்த சம்பவங்கள் குறித்து சிறிய ஓபனிங் கொடுத்த கமல் , போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல்களை சுட்டிக் காட்டினார்.

மேலும் போட்டியாளர்கள் தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவதையும், அவர்களுக்குள் வேகம் அதிகரித்திருப்பதையும் கூறினார். மேலும் க்பாஸ் டாஸ்க்குகள் மூலம் நல்லாவே கொளுத்தி போட்டிருப்பதாகவும் கூறினார் கமல்.

உடை பிடிக்கவில்லை

உடை பிடிக்கவில்லை

தொடர்ந்நது வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதில் அக்ஷரா அணிந்திருந்த உடை தனக்கு பிடிக்க வில்லை என கூறி அவர் அணிந்திருந்த உடையை மாற்றுமாறு கூறினார். மேலும் அக்ஷரா அணிந்திருந்த உடை எப்படி இருக்கிறது என்றும் காம்ப்ளிமென்ட் கொடுத்தார் வருண்.

டச் ஸ்க்ரீனில் தேர்வு

டச் ஸ்க்ரீனில் தேர்வு

அதன் தொடர்ச்சியாக லென்ஸ் கார்ட் கண்ணாடி நிறுவனத்தின் விளம்பரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு வேண்டிய ஃபிரேமை அங்கு வைக்கப்பட்டிருந்த டச் ஸ்க்ரீனில் தேர்வு செய்து போஸ் கொடுக்க வேண்டும்.

ஃபேஷன் ஷோ

ஃபேஷன் ஷோ

பின்னர் அந்த ஃபிரேம் உள்ள கண்ணாடியை அணிந்து கொண்டு அவர்கள் கேட் வாக் செய்ய வேண்டும். அதன்படி ஆக்டிவிட்டி ஏரியாவில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய கண்ணாடியை அணிந்து ஒய்யார நடைபோட்டனர். பின்னர் அந்த ஃபிரேம் உள்ள கண்ணாடியை அணிந்து கொண்டு அவர்கள் கேட் வாக் செய்ய வேண்டும். அதன்படி ஆக்டிவிட்டி ஏரியாவில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய கண்ணாடியை அணிந்து ஒய்யார நடைபோட்டனர்.

மாடல் என்பதை நிரூபித்த ஸ்ருதி

மாடல் என்பதை நிரூபித்த ஸ்ருதி

ஐக்கி பெர்ரி, குட்டி ட்ரவுஸர் அணிந்து செம கெத்தாக நடந்து சென்றார். இதேபோல் ஸ்ருதி, தொடை தெரிய ஓன் சைட் ஓபன் டிரெஸில் தான் மாடல் என்பதை மீண்டும் நிரூபித்தார். இசைவாணி சட்டையை தூக்கி எடுத்து வேற மாதிரி கலக்கினார்.

ஃபிளையிங் கிஸ் கொடுத்து

ஃபிளையிங் கிஸ் கொடுத்து

மற்ற போட்டியாளர்கள் மாடர்ன் டிரெஸில் கலக்க சேலையில் குலுக்கல் நடைபோட்டா தாமரை. மேலும் ஃபிளையிங் கிஸ் கொடுத்தும் கிறங்க வைத்தார். இதேபோல் வருண், நிரூப், அபினய் என ஆண் போட்டியாளர்களும் கலக்கல் நடை போட்டனர்.

வின்னர்ஸ் யார்?

வின்னர்ஸ் யார்?

இந்த போட்டிக்கு ராஜுவும் மதுமிதாவும் நடுவர்களாக இருந்தனர். அவர்களில் பெண் போட்டியாளர்களில் ஸ்ருதி வெற்றி பெற்றதாகவும் ஆண்களில் வருண் பெற்றதாகவும் முடிவை அறிவித்தனர். இதையடுத்து ஸ்ருதிக்கும் வருணுக்கும் லென்ஸ்கார்ட் பரிசு வழங்கப்பட்டது.

பீஸாவை கேக்காக்கி...

பீஸாவை கேக்காக்கி...

பின்னர் இமான் அண்ணாச்சியின் மகள் ஜெபி ஷைனியின் பிறந்தநாளை மொத்த ஹவுஸ்மேட்டும் கொண்டாடினர். இதற்காக பிரித்தி கொடுத்த பீஸாவை கேக்காக பாவித்து வெட்டி அண்ணாச்சிக்கு ஊட்டிவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X