விருப்பமில்லை பிக்பாஸ்..வேண்டுமானால் வெளியே அனுப்புங்கள்...நிரூப்புக்கு பதிலடி கொடுத்த அக்ஷரா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சின்னப்பொண்ணு எவிக்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து யார் யார் எப்படி என ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சக ஹவுஸ்மேட்டுகளுக்கு பேட்ச் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை நிரூப் கைப்பற்றியுள்ளார்.
ஆறு மாத குழந்தை உயிர் பிழைக்க நீங்கள் மனது வைத்தால் உதவ முடியும்

இந்த வாரம் நிலம் காய்ன்
கடந்த வாரம் நெருப்பு காயினை வைத்திருந்த இசைவாணி அதன் ஆற்றலை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டில் தனது ஆளுமையை காட்டினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் நிரூப் வைத்துள்ள நிலம் காயினுக்கான ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளது இன்றைய முதல் புரமோவில் தெரியவந்தது.

பெண் ஒருவரை உதவியாளராக
இதனை தொடர்ந்து நிரூப்புக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் குறித்த அறிக்கையை வாசிக்கிறார் பிரியங்கா. அதன்படி பெண் போட்டியாளர்களில் ஒருவரை உதவியாளராக நிரூப் நியமித்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

எனக்கு விருப்பமில்லை பிக்பாஸ்
இதனை தொடர்ந்து அக்ஷராவை தனக்கு உதவியாளராக வரும்படி அழைக்கிறார் நிரூப். இதனை சற்றும் விரும்பாத அக்ஷரா, பிக்பாஸ் எனக்கு விருப்பமில்லை. என்ன பனிஷ்மென்ட் கொடுக்கிறீர்களோ கொடுங்கள் , வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்றாலும் பிரச்சனை இல்லை என்கிறார் அக்ஷரா.

தீபாவளியை கொண்டாடுங்கள்
இதனைக் கேட்ட நிரூப், இதைத்தான் அவர் முதலில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ், நீங்கள் வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் என கூறுகிறார். இதனை பார்த்த சக ஹவுஸ் மேட்டான ராஜு, தீபாவளி பிரச்சனைகளை பாருங்கள்.. தீபாவளியை கொண்டாடுங்கள் என சன் டிவி ஸ்டைலில் கூறுகிறார்.

அக்ஷராவை ஃபேக் என்ற நிரூப்
இப்படியாக உள்ளது இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ. ஆரம்பத்தில் இருந்து அக்ஷராவை பிரியங்காவுக்கும் நிரூப்புக்கும் பிடிக்கவில்லை. கேப் கிடைக்கும் போதெல்லாம் அக்ஷராவை டார்கெட் செய்து வருகின்றனர். அதிலும் நிரூப் அக்ஷராவை ஃபேக் என்று கூறி வருகிறார்.

பலமுறை மன்னித்திருக்கிறேன்..
நேற்றைய எபிசோடிலும் கமல் முன்னிலையில் அக்ஷராவை ஃபேக் என்று கூறினார் நிரூப். அதற்கு பதில் அளித்த அக்ஷரா, நான் சண்டை போடாமல் பல இடங்களில் தவிர்த்துள்ளேன். நிரூப்பே பிரச்சனைக்கு வந்த போதும், நான் அவரை பலமுறை மன்னித்து விட்டுள்ளேன் என்றார்.

அக்ஷராவின் தடாலடி பதில்
இதனால் கடுப்பான நிரூப், எப்போது மன்னித்தாய் எதற்காக மன்னித்தாய் என கமல் முன்பே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த கோபத்தில் அவரை வச்சு செய்ய முடிவு செய்த நிரூப் அக்ஷராவை உதவியாளராக அழைத்தார். ஆனால் முடியவே முடியாது என்று தடாலடியாக கூறியுள்ளார் அக்ஷரா.


Click it and Unblock the Notifications











