விஷ பாட்டீல்.. தொட்டாச்சினிங்கி.. சிம்பிளி வேஸ்ட்... விருது விழாவை வைத்து கொளுத்தி போட்ட பிக்பாஸ்!
சென்னை: விருது விழா என்ற பெயரில் சகட்டு மேனிக்கு கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பாவனி, அபினய், மதுமிதா ஆகியோர் விருது விழாவில் ராஜு பேசியது குறித்து கிட்சன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது ராஜு, பாவனியை பாவம் நி இல்ல, பாவம் நான் என கூறி கலாய்த்தார். இதனை மனதில் ஏற்றிக்கொண்ட பாவனி, இதை அங்கு பேச தேவையே இல்லை என்று என அபினய்யிடம் கூறி புலம்புவது இன்றைய முதல் புரமோவில் தெரியவந்தது.

பிக்பாஸ் விருது விழா
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் விருது விழாவின் தொடர்ச்சியே காட்டப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் அவரது கேரக்டருக்கு ஏற்றப்படி க்ரீடம் வழங்ப்படுகிறது.

அக்ஷரா விஷ பாட்டீல்
இதில் அக்ஷராவுக்கு விஷ பாட்டீல் என எழுதப்பட்டுள்ள கிரீடத்தை வழங்கும் பாவனி, சில டாஸ்க்குகளில் ரூல் பிரேக் பண்ணியதால் இந்த பிட்டீலை கொடுப்பதாக கூறினார். அதற்கு பதில் கூறும் அக்ஷரா, யாருக்கும் ஏத்திவிட்டு பண்றதோ அல்லது விஷமா இருப்பதோ இல்லை. பிடிக்காவிட்டால் தூரமாக இருந்து கொள்வேன் என்று கூறிவிட்டு செல்கிறார்.

இசைவாணிக்கு தொட்டாச்சினிங்கி
அடுத்து வரும் இமான் அண்ணாச்சி, தொட்டாச்சினிங்கி என்ற கிரீடத்தை இசைவாணிக்கு அணிவிக்கிறார். அந்த கிரீடத்தை கையில் கழட்டி வைத்துக்கொண்ட இசைவாணி, மனசுல வச்சுக்கிட்டு பேசுற ஆள் நான் இல்லை, எதுவாக இருந்தாலும் ஒப்பனா பேசிவிடுவேன் என சொடக்கு போட்டு சொல்கிறார்.

சிம்பிளி வேஸ்ட் கிரீடம்
மேலும் கிரீடத்தை தலையில் வைத்துக் கொள்ள மறுத்த இசைவாணி, அதை போட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறியப்படி செல்கிறார். அடுத்து மதுமிதா நிரூப்புக்கு சிம்பிளி வேஸ்ட் என்ற கிரீடத்தை அணிவிக்கிறார். அப்போது பாவனிக்கும் நிரூப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

நீ கேம்மில் இருப்பதே வேஸ்ட்
அப்போது நிரூப் ஏதோ சொல்ல எனக்கு தெரியாது என்கிறார் பாவனி. அதற்கு பதில் சொல்லும் நிரூப் தெரியாது என்றால் நீங்கள் இந்த கேம்மில் இருப்பதே வேஸ்ட் என்கிறார். அதற்கு சிரித்தப்படியே உங்களை போல எவில் பிரைன் எனக்கு இல்லை என்று கூறுகிறார் பாவனி. மொத்தத்தில் இந்த விருது விழாவின் மூலம் செம விருந்து வைத்துள்ளார் பிக்பாஸ்.


Click it and Unblock the Notifications











