நீ பண்ணது தப்பு.. கேவலமான ஒன்னு.. ராஜுவை கண்டப்படி கழுவி ஊற்றிய பிரியங்கா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அபினய்யிடம் ராஜு கேட்ட கேள்வியை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றிவிட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ட்ரூத் அல்லது டேர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாட்டீலை சுழற்றி விளையாடினர். அப்போது ராஜு அபினய்யிடம் கேட்ட கேள்வி ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பாவனியை லவ் பண்றீங்களா என்று கேட்டார் ராஜு. இதனை அபினய் உட்பட ஹவுஸ்மேட்ஸ் யாருமே எதிர்பார்க்கவில்லை. ராஜு கேட்ட கேள்வி நேற்றைய புரமோவிலும் இடம் பெற்றதால் அப்போதே சமூக வலைதள பக்கத்தில் ராஜுவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர்.

தனியாக கேட்டிருக்கலாம்

தனியாக கேட்டிருக்கலாம்

திருமணம் ஆகி குழந்தை குடும்பம் என இருக்கும் நபரிடம் இப்படி கேட்கலாமா என விளாசினர். இப்போது தான் ராஜுவின் உண்மை முகம் தெரிகிறது என்றும் திட்டி தீர்த்தனர். இதேபோல் பிக்பாஸ் வீட்டிலும் ஹவுஸ்மேட்ஸ் அவரை வச்சு செய்தனர். உனக்குள் அப்படி ஒரு கேள்வி இருக்கும் போது தனியாக கேட்டிருக்கலாம், அதை சபையில் வைத்து கேட்டிருக்க வேண்டாம் என அக்ஷரா, வருண், ஐக்கி ஆகியோர் தெரிவித்தனர்.

ஷாக் ஆகிவிட்டேன்

ஷாக் ஆகிவிட்டேன்

தொடர்ந்து ஐக்கி பெர்ரியும் தாமரை செல்வியும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய ஐக்கி பெர்ரி, ராஜு கேட்ட கேள்வியால் நான் பயங்கர ஷாக் ஆகிவிட்டேன். அபினய்க்கு ஃபேமிலி இருக்கு, குழந்தை இருக்கு, எவ்ளோ பேர் இந்த புரோகிராம்மை பார்க்குறாங்க இப்படி கேட்கலாமா? என்றார்.

நமக்கு என்ன தெரியும்?

நமக்கு என்ன தெரியும்?

அதற்கு பதில் கூறிய தாமரை செல்வி, 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் தான் அபினய் மற்றவர்களிடம் பேசுகிறார். மற்ற நேரம் முழுக்க பாவனியுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறார். இத்தனை கேமராக்கள் பார்க்கிறது. இல்லை என்று சொன்னால் முடிந்து விடும் என்றார். அதற்கு பதில் கூறிய ஐக்கி, அவர்கள் பேசுகிறார்கள், பாவனிக்கு தான் அபினய் எல்லாமே செய்கிறார், ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நமக்கு என்ன தெரியும் என்றார்.

நீ பண்ணது தப்பு

நீ பண்ணது தப்பு

தொடர்ந்து கிட்சன் ஏரியாவில் பாவனி மற்றும் அபினய்யிடம் பேசிய பிரியங்கா, ராஜு அப்படி கேட்டதற்கு நான் ரொம்பவே ஃபீல் பண்ணுகிறேன் என்று, ராஜு அப்படி கேட்டீருக்க கூடாது என்றார். பின்னர் ராஜு பிரியங்காவிடம் பேசினார். அப்போது நான் பேசியது தப்பா என்றார். அதற்கு பதில் கூறிய பிரியங்கா நீ பண்ணது தப்பு, கேவலமான ஒன்னு.

பல இடங்களில்..

பல இடங்களில்..

கல்யாணமனா ஒருத்தன குடும்பம் இருக்கு ஃபேமிலி இருக்கு இப்டி கேட்கலாமா என்று விளாசினார். ராஜு கேட்டது குறித்து பாவனியும் அபினய்யும் கூட கிட்சன், டைனிங் ஏரியா, பெட் ரூம் என பல இடங்களில் விவாதித்தனர். ராஜுவின் கேள்வியார் சமூக வலைதளங்களிலும் விளாசப்பட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X