கூட்டு சேர்ந்த ஹவுஸ்மேட்ஸ்.. குறி வைக்கப்பட்ட ராஜு... வெளியானது நாமினேஷன் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் தேர்வுக்கான டாஸ்க் நடைபெறுவது இன்றைய முதல் புரமோவில் காட்டப்பட்டது.
இதற்காக பொம்மலாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் யார் கேப்டன் ஆகக்கூடாது என விரும்புகிறார்களோ அவர்களின் தலையில் மாட்டப்பட்டுள்ள மண் பானையை உடைக்க வேண்டும் என கூறினார் பிக்பாஸ்.

கதறி அழுத அக்ஷரா
இதைத்தொடர்ந்து அக்ஷரா தலையில் மாட்டப்பட்டிருந்த மண் பானையை உடைத்தார் சிபி. இதனால் கண்ணீர் விட்டு கதறி அழுதார் அக்ஷரா. இதனை தொடர்ந்து இரண்டாவது புரமோ வெளியானது. இதில் பிரியங்காவுக்கும் நிரூப்புக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுவது காட்டப்பட்டது.

குறி வைக்கப்பட்ட ராஜு
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது காட்டப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா, அபினய், பாவனி மற்றும் நிரூப் ஆகியோர் ராஜுவை எவிக்ஷன் புராசஸிற்காக நாமினேட் செய்கின்றனர்.

பிரியங்கா மீது குற்றச்சாட்டு
அவரை தொடர்ந்து பிரியங்காவை ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் பிரியங்கா சண்டை போடுவதாகவும், தான் சொல்வதுதான் சரி என்று கூறுவதாகவும் பிரியங்கா மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

யார் யார் நாமினேட்டட்?
இன்றைய புரமோவின்படி ராஜுவும் பிரியங்காவும் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் நிச்சயம் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இன்னும் யாரெல்லாம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

மாஸ்க்கை கழட்டவில்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ராஜு நகைச்சுவை செய்து வந்தாலும் இன்னும் முழு மூச்சாக விளையாட தொடங்கவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருக்கிறார். சண்டை சச்சரவு என்று வந்தாலும் ஒதுங்கி கொள்கிறார். இதனால் அவர் மாஸ்க் அணிந்திருக்கிறார் என்றார் ஸ்ருதி.

காப்பாற்றி விடுவோம்
இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் ராஜுவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அவர் நாமினேஷனுக்கு வந்தாலும் அவரை காப்பாற்றி விடுவோம் என்கின்றனர் புரமோவை பார்த்த ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











