அடிச்சு விளையாடுறீங்க... பாவனியோட அளவா பழகு... அமீருக்கு அட்வைஸ் சொன்ன இமான் அண்ணாச்சி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாவனியிடம் அளவாக பழகுமாறு அமீருக்கு அண்ணாச்சி அட்வைஸ் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி. கணவரை இழந்த பவானி கடந்து வந்த டாஸ்க்கின் போது தனது கவலையை கூறி ஆத்திரப்பட்டார்.
இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த திருமணமும் நின்று போனதாக கூறினார் பாவனி. மேலும் கடைசி வரை தான் தனியாகவே இருக்க வேண்டும் போல என்று கூறி கண்ணீர் விட்டார்.

கோபப்படும் அபினய்
இதனை தொடர்ந்து பாவனியிடம் நெருக்கமாக பழகி வருகிறார் அபினய். பாவனியை தவிர வேறு யாருடனும் அவர் அந்தளவுக்கு நெருக்கமாக இல்லை. பாவனியிடம் யாராவது பேசினாலோ அல்லது நெருக்கமாக பழகினாலோ அபினய்யின் முகம் மாறிவிடுகிறது. இதனால் அவர்களுக்குள் உள்ள உறவு என்ன என்பது குறித்து ஹவுஸ்மேட்ஸ் அடிக்கடி விவாதித்து வருகின்றனர்.

பாவனியை காதலிக்கிறீர்களா?
ட்ரூத் அல்லது டேர் டாஸ்க்கின் போது ராஜு, அபினய்யிடம் நீங்கள் பாவனியை காதலிக்கிறீர்களா என்று நேருக்கு நேராக கேட்டார். இது பெரும் விவாத பொருளானது. ஆனால் அதற்கு முன்பாகவே பாவனி, அபினய்யிடம் தன்னை காதலிக்கிறீர்களா என கேட்டார். அதற்கு அபினய் இல்லை என்று கூறி விட்டார்.

பாவனியிடம் க்ளோஸான அமீர்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ள அமீர் பாவனியிடம் வந்தது முதலே நெருக்கமாக பழகி வருகிறார். இதற்கு முன்பு பாவனியிடம் எந்த பழக்கமும் இல்லாத அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த இரண்டு நாட்களிலேயே அவரை அடித்து பேசும் அளவுக்கு க்ளோஸானார்.

அடிச்சு விளையாடாதீங்க
இதனை பார்த்த இமான் அண்ணாச்சி நீங்கள் நட்பு ரீதியாகதான் பழகுகிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் பாவனியை அடித்து விளையாடுவது சரியாக தெரியாது. நான் இதை தவறாக சொல்லவில்லை. நீங்கள் எனக்கு வேண்டப்பட்டவர் என்பதால்தான் சொல்கிறேன் என்று அட்வைஸ் கூறினார். அதனைக் கேட்ட அமீர் தான் பாவனியை அடித்து விளையாடுவதை விட்டு ஒரு வாரம் ஆகிவிட்டதாக கூறினார்.


Click it and Unblock the Notifications











