இந்த வாரம் வெளியேறப் போறது இமான் அண்ணாச்சி இல்லையாம்.. டேஞ்சர் ஸோனில் இருப்பது இவங்கதானாம்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷனில் 7 பேர் இடம் பிடித்துள்ளனர். அதன்படி ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் யார் வெளியேறுவார் என்ற நாமினஷன் நடைபெற்ற நாள் முதலே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர்.

கடைசி 5 பேரில் ஒருவர்
இதில் ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரனான நடிகர் அபினய் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் வாரத்தில் இருந்தே நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்து வருகிறார். இதில் கடைசி நபர் அல்லது கடைசி 5 பேரில் ஒருவராகதான் காப்பாற்றப்படுகிறார் அபினய்.

ஸ்ருதி வெளியேற்றம்
கடந்த வாரமும் ஸ்ருதியும் அபினயும் தான் இறுதி வரை வந்தனர். அவர்களில் அபினய்தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்ருதி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வாய்ப்பு வழங்கப்படவில்லை
கமலின் சிபாரிசால் வந்தவர் அபினய் என்பதால் அவரை இன்னும் கொஞ்ச நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு அபினய்க்கு அவரை நிரூபிக்க இதுவரை ஒரு வாய்ப்புக் கூட வழங்கப்படவில்லை.

தட்டிப்பறித்த இசைவாணி
இந்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்று கேப்டன் ஆனார் அபினய். ஆனால் அந்த பதவியை தனது நெருப்பு காயின் மூலம் தட்டிப் பறித்தார் இசைவாணி. இதனால் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாகும் வாய்ப்பை இழந்தார் அபினய். ஆகையால் அவரை ஒரு முறையாவது கேப்டனாக்கி, நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டுதான் வெளியே அனுப்புவார்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த வாரம் இமான்?
மதுமிதா ஜெர்மனியில் இருந்து வந்துள்ளார் என்பதால் அவரையும் இன்னும் கொஞ்ச நாள் வைத்திருந்துதான் வெளியே அனுப்புவார்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். ஆகையால் இந்த வாரம் இமான் அண்ணாச்சியை தான் வெளியேற்றுவார்கள் என்றும் நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

அதிக வாக்குகளை குவித்த ராஜு
இந்நிலையில் இந்த வாரம் பதிவான வாக்குகள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி அதிக வாக்குகளை பெற்று ராஜு முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அக்ஷரா உள்ளார். மூன்றாவது இடத்தில் சிபி. கடந்த வாரம் கடைசி இருவரில் ஒருவராக இருந்த அபினய் இந்த வாரம் 4 வது இடத்தை பிடித்துள்ளார்.

கடைசி இடத்தில் யார்?
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இமான் அண்ணாச்சி 5வது இடத்தை பிடித்துள்ளார். பாவனி ரெட்டி 6வது இடத்திலும் மதுமிதா கடைசி இடத்திலும் உள்ளனர். இதனால் மதுமிதா வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எப்படி வேண்டுமானாலும்
ஆனால் கடைசி மூன்று இடத்தை பிடித்துள்ள போட்டியாளர்கள் பெற்றுள்ள வாக்கு வித்தியாசம் வெறும் ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. நாளை எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நடைபெற உள்ள நிலையில் வாக்களிக்க இன்று ஒரு நாள் உள்ளது என்பதால் இது எப்படி வேண்டுமானாலும் மாறும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











