கூடும் க்ரைம் ரேட்.. உன்னைவிட அதிகமா கத்துவேன்... என்கிட்ட வச்சுக்காத.. தாமரையிடம் எகிறிய இசைவாணி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் இசைவாணி தாமரை செல்வியிடம் எகிறியதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் வாரா வாரம் திங்கள் கிழமை கேப்டன்சி டாஸ்க் நடைபெறுவது வழக்கம். இந்த வார கேப்டன் பதவிக்கான டாஸ்க் நேற்று நடைபெற்றது.

இதில் நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்க்கில் வெற்றி பெற்ற நிரூப் மற்றும் கருத்துக்களை தைரியமாக முன் வைக்கும் நபர்கள் பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி என மொத்தம் 4 பேர் பங்கேற்றனர்.

பிக்பாஸ் டீம் பிரிப்பு

பிக்பாஸ் டீம் பிரிப்பு

இந்த டாஸ்க்கில் பிரியங்கா வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் யார் யார் எந்தெந்த துறை என டீம் பிரிக்கப்பட்டது. அப்போது ரேஷன் பார்த்துக்கொள்ள அபினய் மற்றும் இசைவாணியை தேர்வு செய்தார் பிரியங்கா. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணாச்சி, இரண்டு பேருமே ஏற்கனவே இருந்துவிட்டார்கள், இல்லாதவர்களுக்கு கொடுக்கலாமே என்றார்.

கும்பிடு போட்ட இசைவாணி

கும்பிடு போட்ட இசைவாணி

அப்போது குறுக்கிட்ட தாமரை செல்வி, ரேஷனில் இருப்பவர்களிடம் கேட்டுவிட்டுதான் சமைக்க வேண்டுமா? அல்லது சமைக்க வேண்டிய பொருட்களை மட்டும் கேட்டால் கொடுப்பார்களா என்றார். இதனை பார்த்த இசைவாணி தாமரை செல்வியை பார்த்து பெரிய கும்பிடு போட்டு நீ என்னிடம் பேசவே வேண்டாம் என்றார்.

குரலை உயர்த்திய தாமரை

குரலை உயர்த்திய தாமரை

இதனால் கடுப்பான தாமரை செல்வி, எதுக்கு இப்போது கையடுத்து கும்பிடுகிறாய்? என்ன சொல்கிறேன் என்பதை முதலில் கேள் என்றார். அதற்கு நீ எதுவும் சொல்லவே வேண்டாம் என வெறுப்பேற்றினார் இசைவாணி. இதனால் கோபப்பட்ட தாமரை செல்வி குரலை உயர்த்தி பேசினார்.

உன்னை விட அதிகமா கத்துவேன்

உன்னை விட அதிகமா கத்துவேன்

இதை பொறுத்துக்கொள்ள முடியாத இசைவாணி, என்கிட்ட கத்தி பேசாத, உன்னை விட அதிகமாக கத்துற ஆள் நான். என்கிட்ட இந்த வேலை வச்சுக்காதே என தாமரை செல்வியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் படு மோசமாக நடந்து கொண்டார்.

 நான் என்ன இளிச்ச வாயா?

நான் என்ன இளிச்ச வாயா?

கார்டன் ஏரியாவிலும் இதுகுறித்து பேசிய இசைவாணி, எல்லாரும் என்கிட்ட கத்துவாங்க, அதையெல்லாம் கேட்க நான் என்ன இளிச்ச வாயா என்றார். இதைக்கேட்ட அண்ணாச்சி, தாமரை செல்வி என்ன சொல்ல வருகிறார் என்று கேட்காமலேயே நீ ஏன் கையெடுத்து கும்பிட்டாய்? அதனால்தான் அவர் குரலை உயர்த்தி பேசினார் என்றார்.

மறைமுகமாக சாடிய இசைவாணி

மறைமுகமாக சாடிய இசைவாணி

ஏற்கனவே இசைவாணி அண்ணாச்சியுடன் அவ்வப்போது சண்டை போட்டு வருகிறார். அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் சமமாக சண்டை போட்டு வருகிறார். பிக்பாஸ் விருது விழாவிலும் கூட அண்ணாச்சி கொடுத்த விருதை வீசி எறிந்தார். இதனால் கமல்ஹாசனே அவரை தொட்டாச்சினிங்கி என மறைமுகமாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X