இந்த மேட்டரை சொல்லவே இல்லையே... திருமணத்தை மறைத்த இசைவாணி.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இசைவாணி தனக்கு திருமணமானதை மறைத்தது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

போட்டியாளர்கள் குறித்து அறிந்து சக போட்டியாளர்களும் ரசிகர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

கானா பாடகி இசைவாணி

கானா பாடகி இசைவாணி

இதில் சில போட்டியாளர்கள் மட்டுமே தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளனர். அந்த வகையில் இந்த டாஸ்க்கில் முதல் ஆளாக கானா பாடகி இசைவாணி தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். வட சென்னையை சேர்ந்த இசைவாணி ஒரு கானா பாடகி ஆவார்.

டிரெஸ் இருக்காது சாப்பாடு இருக்காது

டிரெஸ் இருக்காது சாப்பாடு இருக்காது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது அப்பாவுக்கு பாடகர் ஆக வேண்டும் என்று ஆசை, ஆனால் அவருக்கு பல மேடைகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. போட்டுக்கொள்ள டிரெஸ் இருக்காது, சாப்பிட சாப்பாடு இருக்காது, தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டோம்.

வீட்டில் டிவி கூட இல்லை

வீட்டில் டிவி கூட இல்லை

வாடகை கொடுக்க முடியாமல் போனதால் ஒவ்வொரு வீடாக மாறிக்கொண்டே இருந்தோம் என்றும் கூறி கண்ணீர் விட்டார். தனது அண்ணன் படிப்பிற்காக உறவினர்கள் காலில் விழுந்து தனது அப்பா கெஞ்சிய போதும் யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கூறினார் இசைவாணி. வீட்டில் டிவி கூட இல்லை என்றும் ஒரு வேளை சாப்பாடுதான் இருக்கும் என்றும் கண்ணீர் மல்க கூறினார் இசைவாணி.

போன் வாங்குன விலைக்கு..

போன் வாங்குன விலைக்கு..

அவரது கதையை கேட்ட சக ஹவுஸ்மேட்ஸும் கண்ணீர் விட்டனர். ஆனால் அப்போதே இசைவாணியை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர் நெட்டிசன்கள். அரசு பள்ளியில் படித்தபோது எதற்கு பீஸ் கட்ட வேண்டும் என்றும் மொபைல் போன் வாங்கிய விலைக்கு டிவி வாங்கியிருக்கலாமே என்றும் கூறினர்.

இசைவாணிக்கு திருமணம் ஆகிவிட்டது

இசைவாணிக்கு திருமணம் ஆகிவிட்டது

இந்நிலையில் இசைவாணியின் போட்டோக்கள் சில இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இசைவாணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மேலும் இசைவாணியின் கணவரும் ஒரு கானா பாடகர்தான். இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

திருமணத்தை மறைத்தது ஏன்?

திருமணத்தை மறைத்தது ஏன்?

தற்போது அவரது போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்த நெட்டிசன்கள் தன்னுடைய சோகக் கதையை சொன்ன போது இசைவாணி ஏன் தனது திருமண முறிவு குறித்து பேசவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் திருமணம் குறித்து மறைத்தது ஏன் என்றும் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

ஏன் கணவரை பிரிந்தார்?

ஏன் கணவரை பிரிந்தார்?

மேலும் இசைவாணி ஏன் கணவரை பிரிந்தார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் பாவனி ரெட்டி தனது கணவர் மரணம் பற்றி இசைவாணியிடம் தனியாக பேசிய போது, தானும் விவாகரத்தானவர்தான் என கூறினார் இசைவாணி. ஆனால் ரசிகர்களுக்கு தனது விவாகரத்து குறித்து தெரிவிக்க அவர் விரும்பவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X