நான் ஒதுக்கப்படுவது போல் உணருகிறேன்... கமலிடம் கம்ப்ளைன்ட் பண்ணிய இசைவாணி!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் தான் ஒதுக்கப்படுவதாக உணருவதாக கானா பாடகியான இசைவாணி கமலிடம் கொட்டித் தீர்த்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் இசைவாணி. வட சென்னையை பூர்விகமாக கொண்ட இசைவாணி, கானா பாடகி ஆவார்.

பிக்பாஸ் வீட்டில் தன்னை பலரும் ஒதுக்குவதாக நினைத்து ஒதுங்கியே இருக்கிறார். அபிஷேக்கிடம் மட்டும் அடிக்கடி கலாய்த்து அசால்ட்டாக பேசி வருகிறார் இசைவாணி.

அண்ணாச்சியால் மன வருத்தம்

அண்ணாச்சியால் மன வருத்தம்

இமான் அண்ணாச்சி பேசியது கூட தனக்கு மன வருத்தத்தை கொடுத்ததாக அவரிடமே கூறினார். ஆனால் எந்த விஷயம் உங்களை காயப்படுத்தியது என்று சொல்லுங்கள் அதை அவாய்ட் பண்ணிக்கலாம் என்று பிராக்ட்டிக்கலாக பேசி பிரச்சனையை சால்வ் செய்தார்.

நீங்கள் ஒதுக்கப்படுவதாக உணருகிறீர்களா?

நீங்கள் ஒதுக்கப்படுவதாக உணருகிறீர்களா?

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இசைவாணியிடம் பேசிய கமல் நீங்கள் ஒதுக்கப்படுவதாக உணருகிறீர்களா என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்ற இசைவாணியிடம் யார் உங்களை அப்படி ஃபீல் பண்ண வைத்தது என்றார். அதற்கு பிரியங்கா, அபிஷேக், இமான் அண்ணாச்சி, வருண் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரியங்காவிடம் கேட்ட கமல்

பிரியங்காவிடம் கேட்ட கமல்

நான் போனதும் வருண் வியற்கிறது என்று கூறி உள்ளே சென்றார். பிறகு நான் பெண் போட்டியாளர்களுடன் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன் என்று கூறினார் இசைவாணி. இதனைக் பேட்ட கமல் பிரியங்காவிடம் இதுகுறித்து விசாரித்தார்.

எப்போதும் ஜாலியாகதான் இருக்கிறோம்

எப்போதும் ஜாலியாகதான் இருக்கிறோம்

அதற்கு பதில் கூறிய பிரியங்கா, அவரே பேசுவார் அவரே போய்விடுவார். வேண்டும் என்றே அப்படி எதுவும் செய்யவில்லை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அபினய்யும் ஒதுக்கவில்லை சார். எப்போதும் ஜாலியாகதான் இருக்கிறோம் என்று கூறினார்.

பால் இல்லை என்று கூறிவிட்டார்

பால் இல்லை என்று கூறிவிட்டார்

அப்போது குறுக்கிட்ட இசைவாணி, நான் டீ குடிப்பேன் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் டீ கேட்ட போது பால் இல்லை என்று கூறிவிட்டார் என்று அபினய் என புகார் கூறினார். அதற்கு பதில் கூறிய அபினய், பால் வழக்கமாக இருக்கும் இடத்தில் இல்லை. ஆகையால் இல்லை என்று நினைத்து அப்படி கூறினேன். அதன் பிறகு எல்லோருக்கும் டீ மற்றும் காஃபி போட்டு வைத்தோம் என்றார்.

யாரும் ஒதுக்கவில்லை.

யாரும் ஒதுக்கவில்லை.

இதனை தொடர்ந்து நிரூப்பிடமும் விளக்கம் கேட்டார் கமல். அதற்கு பதில் கூறிய நிரூப், என்னிடம் வந்து இசைவாணி இதை கேட்டார் பேசக்கூடாது என்று இல்லை என்று கூறியதாக பதிலளித்தார். அவரை யாரும் ஒதுக்கவில்லை. அவரே அப்படி நினைக்கிறார் என்றும் கூறினார்.

உங்கள் ஒப்பினியனை மாற்றுங்கள்

உங்கள் ஒப்பினியனை மாற்றுங்கள்

அதற்கு பதில் கூறிய இசைவாணி, நான் ஃபீல் பண்ணவில்லை. என்னுடைய ஒப்பினியன் அது என்றார். இதனை கேட்ட கமல் உங்களின் ஒப்பினியனை மாற்றுங்கள் என்றார். மேலும் இசைவாணியின் மனதை மாற்ற வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது என்றும் ஹவுஸ்மேட்டுகளுக்கு அறிவுரை கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X