என்ன ஒரு வில்லத்தனம்.. அண்ணாச்சியின் முதுகில் குத்தி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றிய இசைவாணி!
சென்னை: பொம்மை டாஸ்க்கில் இமான் அண்ணாச்சியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே கடைசியாக கூடாரத்திற்குள் நுழைந்தார் இசைவாணி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிலும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்க்கே தொடர்ந்தது.
இது மற்றவர்களுக்காக விளையாடும் போட்டி என்பதால் தங்களுக்கு பிடித்தவர்கள் ஜெயிக்க வேண்டும் என அவர்களின் பொம்மைகளை வேக வேகமாக தூக்கிக் கொண்டு ஓடினர் ஹவுஸ்மேட்ஸ்.+

அண்ணாச்சி பொம்மை
தோற்க வேண்டும் என நினைக்கும் போட்டியாளர்களின் பொம்மைகளை எடுத்துக்கொண்டு கடைசியாக கூடாரத்துக்குள் சென்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோடில் அண்ணாச்சியின் பொம்மையை எடுத்தார் இசைவாணி.

கடைசியாகதான் போவேன்
ஆனால் அண்ணாச்சி தோற்க வேண்டும் என்று நினைத்த இசைவாணி அவரது பொம்மையை எடுத்து கொண்டு உள்ளே செல்லாமல் வெளியேவே நின்று கொண்டிருந்தார். தான் கடைசியாகதான் இந்த பொம்மையை எடுத்தேன். அதனால் கடைசியாகதான் உள்ளே வருவேன் என விடாபிடியாக இருந்தார்.

முதுகில் குத்திய இசைவாணி
பின்னர் எல்லோரும் உள்ளே சென்ற பிறகு கடைசியாக அண்ணாச்சியின் பொம்மையை கொண்டு சென்றார். இதனை தொடர்ந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் இமான் அண்ணாச்சி. போட்டியிலிருந்து வெளியேறிய அண்ணாச்சி இசைவாணி தன் முதுகில் குத்தி விட்டதாக கூறினார்.

எப்படி ஜட்ஜ் பண்ணலாம்?
ஆனால் நான் முதுகில் குத்தவில்லை, நேராகவே குத்தி விடுவேன் என்றார் இசைவாணி. இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கும் ஒருவரை பிடிக்காது என்று ராஜு கூறியதும் நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம்? என்னை எப்படி நீங்கள் ஜட்ஜ் பண்ணலாம் என அவரிடம் ஏறினார்.

என்ன ஒரு வில்லத்தனம்
இன்றைய எபிசோடில் இசைவாணி விளையாடியதை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஒரு வில்லத்தனம், வேண்டும் என்றே அண்ணாச்சியை வெளியேற்ற வைத்துவிட்டார் என்று கூறி வருகின்றனர். மேலும் இசைவாணியின் ஆட்டத்தில் தற்போது ஓவர் ஆட்டியூட் காட்டுவதாக கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











