அபினய்யின் கேப்டன் பதவியை தட்டிப் பறித்த இசைவாணி.. எச்சில் தட்டை எடுக்க வைத்த பிக்பாஸ்!
சென்னை: தான் வைத்திருந்த நெருப்பு காயின் மூலம் அபினய்யின் கேப்டன் பதவியை தட்டிப் பறித்து இந்த வார கேப்டன் ஆகியுள்ளார் இசைவாணி.
இன்று திங்கள் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டனை தேர்வு செய்வதற்காக பொம்மலாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதன்படி கார்டன் ஏரியாவில் ஹவுஸ்மேட்டுகளின் பொம்மைகள் வைக்கப்பட்டன. பொம்மைகளின் தலைக்கு பின்னால் மண் பானை வைக்கப்பட்டது.

பானையை உடைக்க வேண்டும்
இதில் யாரெல்லாம் கேப்டன் ஆக வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்கள் தாங்கள் ஏன் கேப்டனாக வேண்டும் என விளக்கி சக போட்டியாளர்களை திருப்தி படுத்த வேண்டும். அவர்களில் யாரை வேண்டாம் என சக ஹவுஸ்மேட்ஸ் நினைக்கிறார்களோ அவர்களின் தலைக்கு பின்னால் கவிழ்க்கப்பட்ட மண் பானையை உடைக்க வேண்டும்.

கதறி அழுத அக்ஷரா
இதில் முதல் நபராக சிபி அக்ஷராவின் பானையை உடைத்தார். அக்ஷரா தன்னிடம் காய்ன் இல்லை தனக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் அதை கொஞ்சமும் காதில் வாங்காத சிபி அக்ஷராவின் பானையை உடைத்து விட்டடார். இதனால் ஆத்திரப்பட்ட அக்ஷரா, எல்லா பிரச்சனையையும் மனதில் வைத்துக்கொண்டே சிபி பழகுகிறார் என வருணிடம் கொட்டித் தீர்த்தார். பின்னர் கண்ணீர் விட்டும் கதறி அழுதார் அக்ஷரா.

மது பானை உடைப்பு
இதைத்தொடர்ந்து வந்த இசைவாணி, வருணின் பானையை உடைத்து அவர் கேப்டனாகும் வாய்ப்பை பறித்தார். அடுத்து வந்த ஐக்கி பெர்ரி பாவனியின் பானையை அடித்து நொறுக்கினார். அவரை தொடர்ந்து வந்த தாமரை செல்வி, பிரியங்கா கூறிய பாயிண்ட்டுகளை கேட்டு திருப்தி அடைந்து மதுமிதாவின் பானையை உடைத்தார்.

மூன்று பேருக்கு இடையே போட்டி
பிரியங்கா எவ்வளவோ பேசி பேசி கடைசி வரை தனது தலையை காப்பாற்றி வந்தார். ஆனால் கடைசியில் நிரூப், அபினய், பிரியங்கா என மூன்று பேருக்கு இடையேயும் போட்டி வந்தது. அப்போது ராஜு நிரூப்பின் பானையை உடைத்தார், மேலும் நிரூப்பிடம் உள்ள காயினை வைத்து அவர் கேப்டனாகலாம் என்றார்.

கேப்டனான அபினய்
அடுத்து வந்த அண்ணாச்சி, அபினய் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வேண்டும் என கூறியதை கேட்டு பிரியங்காவின் பானையை உடைத்தார். இதனை தொடர்ந்து அபினய்யை கேப்டனாக அறிவித்தார் பிக்பாஸ். பின்னர் காயின்களை வைத்திருந்த நிரூப், இசைவாணி மற்றும் பாவனியிடம் அவர்களின் காயினை வைத்து கேப்டனாக விருப்பமா என கேட்டார் பிக்பாஸ்.

எச்சில் தட்டை எடுக்க வேண்டும்
அதற்கு தான் கேப்டன் ஆக விரும்புவதாக கூறி தனது காயினை பயன்படுத்திக் கொண்டார் இசைவாணி. இதன் மூலம் அபினயின் கேப்டன் பதவியை கடைசி நிமிடத்தில் தட்டிப் பறித்தார் இசைவாணி. ஈஸியாக கேப்டனான இசைவாணியை எல்லோருக்கும் உணவு பரிமாற வேண்டும் என்றும் எச்சில் தட்டை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டார் பிக்பாஸ்.


Click it and Unblock the Notifications











