செம டிவிஸ்ட்.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டது இவர்தான்.. ஷாக்கில் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 60 நாட்களை நெருங்கி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்.
அந்த வகையில் இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி என 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புதிய போட்டியாளர்கள்
அதே நேரத்தில் வைல்டு கார்டாகவும் 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜாவுக்கு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டான்ஸ் மாஸ்டர் அமீர், சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் ஆகியோர் புதிய போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

6 நாமினேஷன் லிஸ்ட்
இதனால் வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வார எவிக்ஷன் புராசஸிஸ்ற்கான நாமினேஷன் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, நிரூப், பாவனி, தாமரை என 6 பேர் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கு நாமினேட் ஆயினர்.

முடிவு செய்து விட்டார்கள்
6 பேருமே முக்கிய போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்ற குழப்பம் இருந்தது. ஆனால் சில போட்டியாளர்கள் தாமரையை குறி வைத்து பேசியதால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்து விட்டார்கள் போல என்று கூறினர் ரசிகர்கள்.

தாமரை டேஞ்சர் ஸோனில்
அதற்கு ஏற்றார் போலவே அன் அஃபிஷியல் வோட்டிங்கில் தாமரை கடைசி இடத்தில் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதனால் அவர்தான் டேஞ்சர் ஸோனில் இருப்பதாகவும் கூறப்பட்டது. தாமரைக்கு முன்பாக பாவனியும், பாவனிக்கு முன்பாக நிரூப்பும், நிரூப்புக்கு முன்பாக ஐக்கி பெர்ரியும் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த வாரம் வெளியேறியது இவர்தான்
கடைசி நாள் வாக்குப்பதிவில் எப்படி வேண்டுமானாலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மாறும் என கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளைய எபிசோடில் வெளியாகும். நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கமல். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











