உங்கக்கிட்ட பழமையும் இருக்கு... இப்படிலாம் பேசக்கூடாது.. அண்ணாச்சிக்கு அட்வைஸ் செய்த கமல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அண்ணாச்சிக்கு அட்வைஸ் செய்தார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நெருப்பு காயினின் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு நெருப்பு காயினை வைத்திருந்த இசைவாணிக்கு சில பவர்களை கொடுத்திருந்தார் பிக்பாஸ்.

இதனால் இசைவாணி சக போட்டியாளர்களிடம் ரூடாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல போட்டியாளர்களுடன் இசைவாணிக்கு பிரச்சனை ஏற்பட்டது.

சர்வாதிகாரி போல்

சர்வாதிகாரி போல்

குறிப்பாக அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன. அண்ணாச்சி இசைவாணியின் நடவடிக்கையை சர்வாதிகாரி போல் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது.

எனக்கு சந்தேகம்

எனக்கு சந்தேகம்

மேலும் ஒரு பொண்ணா இருந்து, சொல்லும் அட்வைஸை கேள் என்றார் இமான் அண்ணாச்சி. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அந்த பிரச்சனை குறித்து பேசினார் கமல். அப்போது அண்ணாச்சயிடம் இதுகுறித்து விசாரித்தார். நீங்கள் அமெரிக்காவில் இருந்து வந்துவீட்டிற்களா என்று கேட்டேன், இப்போது அமெரிக்கா போனீர்களா என்ற சந்தேகம் எனக்கு வந்து வட்டது என்றார் கமல்.

அண்ணாச்சிக்கு அட்வைஸ்

அண்ணாச்சிக்கு அட்வைஸ்

உங்களிடம் பழைமையும் உள்ளது. பொம்பள பிள்ளையா சொல்வதை கேள், என்று கூறினீர்கள். வயதில் பெரியவர் என்ற முறையில் சொல்வதை கேள் என்று கூறலாம். இந்த சுதந்திரத்தை கொடுத்ததே நாம்தான் என்று அட்வைஸ் கூறினார். கமல் கூறியதை கேட்ட அண்ணாச்சி மாற்றிக் கொள்கிறேன் என்று உறுதி கூறினார்.

சேவ் ஆன போட்டியாளர்கள்

சேவ் ஆன போட்டியாளர்கள்

நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். அதுபோல் பேசி பாருங்கள் நன்றாக இருக்கும் என்றும் கூறினார் கமல். இதனை தொடர்ந்து அவர்கள் இருவருமே இந்த வாரம் நாமினேஷனில் இருந்து சேவ் ஆனதாக கூறினார் கமல். இதன் மூலம் சனிக்கிழமை எபிசோடில் இமான் அண்ணாச்சியும் இசைவாணியும் காப்பாற்றப்பட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X