முதல் வாரத்திலேயே டிஸ்லைக்குகளை குவித்த அக்ஷரா.. நடிக்கிறாரா தாமரை? பற்ற வைத்த பிக்பாஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட லைக் மற்றும் டிஸ்லைக் கேம்மில் அக்ஷரா டிஸ்லைக்குகளை குவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என பிரிக்குமாறு போட்டியாளர்களுக்கு லைக் மற்றும் டிஸ்லைக் கேம் கொடுத்தார் கமல்.

ஒரு வாரம் ஆன நிலையில் ஹவுஸ்மேட்ஸ் எந்தளவுக்கு ஒவ்வொருவரையும் புரிந்து வைத்துள்ளனர் என்பதை டெஸ்ட் செய்யும் வகையில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அக்ஷரா பேசுவதில்லை

அக்ஷரா பேசுவதில்லை

இதில் முதல் நபராக வந்த ராஜு நிரூப் இன்னமும் குழந்தை போலவே இருப்பதாக கூறி டிஸ்லைக் கொடுத்தார். இமான் அண்ணாச்சியுடன் நல்ல கனெக்ட் இருப்பதாக கூறி லைக் கொடுத்தார். அடுத்ததாக வந்த இசைவாணி, அக்ஷரா பேசுவதில்லை என டிஸ்லைக் கொடுத்தார். அபிஷேக்கிற்கு லைக் கொடுத்தார்.

நிரூப்புடன் நல்ல ஜெல்லாகிவிட்டது

நிரூப்புடன் நல்ல ஜெல்லாகிவிட்டது

சின்னப்பொண்ணு இமான் அண்ணாச்சி வந்தபோது பேசியது போல் இப்போது பேசவில்லை என டிஸ்லைக் கொடுத்தார். மனதில் எதையும் வைத்துக்கொள்ளவில்லை என பிரியங்காவுக்கு லைக் கொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த பிரியங்கா நடியா இன்னும் பேசவில்லை என்று கூறி டிஸ்லைக் கொடுத்தார். நிரூப்புடன் நல்ல ஜெல்லாகிவிட்டதாக கூறி லைக் கொடுத்தார்.

சிபி என்னை போல் இருக்கிறார்

சிபி என்னை போல் இருக்கிறார்

அவரை தொடர்ந்து வந்த அபினய் சிபி 10 வருடத்துக்கு முன்பு தான் இருந்ததை போல் இருப்பதாகவும் அவர் தன்னுடைய மெச்சூரிட்டியை அதிகரித்து கொள்ள வேண்டும் என்று கூறி சிபிக்கு டிஸ்லைக் கொடுத்தார். பிரியங்காவுக்கு லைக் கொடுத்தார்.

பழிக்கு பழியாகிவிடும்

பழிக்கு பழியாகிவிடும்

அக்ஷரா தான் இன்னமும் நடியாவுடன் பேசவில்லை என்றும் இசைவாணிக்கு டிஸ்லைக் கொடுத்தால் பழிக்கு பழியாகிவிடும் என்று நடியாவுக்கு டிஸ்லைக் கொடுத்தார். நிரூப்புக்கு லைக் கொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த மதுமிதா தாமரை நிறத்தை பற்றி பேசியது வருத்தமாக இருந்தது என டிஸ்லைக் கொடுத்தார். நடியா தன்னை மோட்டிவேட் செய்வதாக கூறி லைக் செய்தார்.

மது என் மூத்த மகள் போல்

மது என் மூத்த மகள் போல்

நிரூப் நடியாவுடன் இன்னும் பேசவில்லை என்று கூறி டிஸ்லைக் கொடுத்தார். பிரியங்காவை ரொம்ப பிடிக்கும் என்று கூறி லைக் கொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த நடியா, ஆட்டியூட் காட்டுவதாக கூறி அக்ஷராவுக்கு டிஸ்லைக் கொடுத்தார். தன்னுடைய மூத்த மகளை போன்று இருப்பதாக கூறி மதுமிதாவுக்கு லைக் கொடுத்தார்.

அண்ணாச்சிக்கு

அண்ணாச்சிக்கு

ஸ்ருதியும் அக்ஷரா வந்த போது இருந்ததை போல் இப்போது இல்லை எனக்கூறி அக்ஷராவுக்கு டிஸ்லைக் கொடுத்தார். ராஜுவுக்கு லைக் கொடுத்தார். அடுத்து வந்த சிபி இமான் அண்ணாச்சி பேசிய சில விஷயங்கள் புரியவில்லை எனக்கூறி டிஸ்லைக் கொடுத்தார். அபினய் நேருக்கு நேராக சொன்ன சில விஷயங்கள் பிடித்திருக்கிறது என லைக் கொடுத்தார்.

தாமரை மீது சந்தேகம்

தாமரை மீது சந்தேகம்

அவரை தொடர்ந்து வந்த வருண் தாமரை எதார்த்தமாக இருக்கிறாரா அல்லது திட்டமிட்டு அப்படி காட்டிக் கொள்கிறாரா என்று கூறி அவருக்கு டிஸ்லைக் கொடுத்தார். ராஜுவுக்கு லைக் கொடுத்தார் வருண்.
அபிஷேக் தாமரைக்கு டிஸ்லைக் கொடுத்தார். பாவனிக்கு லைக் கொடுத்தார்.

இன்னமும் சுறுசுறுப்பாக இருக்கிறார்

இன்னமும் சுறுசுறுப்பாக இருக்கிறார்

பாவனி அபினய் எப்போதும் கிண்டல் செய்வதாக கூறி டிஸ்லைக் கொடுத்தார். அண்ணாச்சிக்கு லைக் கொடுத்தார். ஐக்கி பெர்ரி பிரியங்காவுக்கு டிஸ்லைக் கொடுத்தார். மதுவுக்கு லைக் கொடுத்தார். தாமரை அக்ஷரா முன்பு போல் பேசுவதில்லை என டிஸ்லைக் கொடுத்தார். அண்ணாச்சிக்கு லைக் கொடுத்தார் தாமரை. அண்ணாச்சி ஐக்கி பெர்ரி வந்த நாளில் இருந்து இன்னமும் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று கூறி லைக் கொடுத்துள்ளார்.

டிஸ்லைக்குகளால் கண்ணீர்விட்ட அக்ஷரா

டிஸ்லைக்குகளால் கண்ணீர்விட்ட அக்ஷரா

இந்த கேம்மில் ஸ்ருதி, வருண், சின்னப்பொண்ணு, இசை ஆகியோருக்கு லைக்கும் கிடைக்கவில்லை டிஸ்லைக்கும் கிடைக்கவில்லை. அதிகப்படியாக அக்ஷரா 4 டிஸ்லைக்குகளை பெற்றார். பிரியங்கா அதிக லைக்குகளை பெற்றார். அதிக டிஸ்லைக்குகளை பெற்றதால் கண்ணீர்விட்டு அழுதார் அக்ஷரா. அவரை ஸ்ருதியும் இசையும் ஆறுதல் படுத்த முயன்றனர்.

வரும் வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கும்

வரும் வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கும்

ஆனால் நீங்கள் இப்போது பேசுவது ஃபேக்காக இருக்கிறது என மூஞ்சில் அடித்ததுப்போல் கூறினார் அக்ஷரா. இந்த டாஸ்க்கின் மூலம் தாமரை வெள்ளந்தியாக நடிக்கிறாரா என்றும் அக்ஷரா ஆட்டியூட் காட்டுகிறாரா என்றும் கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ். இது வரும் வாரங்களில் கண்டிப்பாக விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X