பிக்பாஸ் ஸ்க்ரிப்ட்டட் ஷோவா? பொம்மை டாஸ்க்கை வைத்து விளக்கம் கொடுக்கும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் ஹவுஸ்மேட்டுகளை அகம் டிவி வழியாக சந்தித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
வாரம் முழுவதும் நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிப்பார் நடிகர் கமல்ஹாசன். அந்த வகையில் இன்று சனிக்கிழமை என்பதால் ஹவுஸ்மேட்டுகளை சந்திக்கிறார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன்.

எது எல்லை, எது வரம்பு?
இன்றைய முதல் புரமோவில் பொம்மை டாஸ்க்கின் போது நடந்த சம்பவங்கள் குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ஹவுஸ்மேட்ஸ் அன்று எல்லை மீறியது குறித்தும் விமர்சித்துள்ளார். எது எல்லை, எது வரம்பு என போட்டியாளர்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

பிக்பாஸ் ஸ்க்ரிப்ட்டடா?
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்டடா என்பதை விளக்கும் வகையில் பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் ஸ்க்ரிப்ட்டட் என்று கூறுகிறார்கள்.

யாருக்கு பிடிக்கவில்லை?
அது ஸ்க்ரிப்டட் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர் என்று கூறிய கமல், பொம்மை டாஸ்க்கில் நிரூப் விளையாடிய விதம் யாருக்கு பிடிக்கவில்லை என்று கேட்கிறார்.

யாருக்கு பிடித்திருந்தது?
அதற்கு வருண், என்னைதான் டார்கெட் முடிச்சுடணும் என்று நிரூப் விளையாடினார் என்கிறார். அதனை தொடர்ந்து பிரியங்கா மற்றும் அக்ஷரா ரெட்டியும் நிரூப் விளையாடியது பிடிக்கவில்லை என்கின்றனர். தொடர்ந்து பேசும் கமல் யாருக்கு நிரூப் விளையாடியது பிடித்திருந்தது என்று கேட்கிறார்.

நீங்களே எழுதிக்கலாம்
அதற்கு ராஜு, நிரூப் விளையாடியது தனக்கு இன்ட்ரெஸ்டிங்காக இருந்தது என்கிறார். அப்போது பேசும் கமல், இது ஸ்க்ரிப்ட்டட்ன்னா எப்படின்னா, அப்பப்போ நீங்களே எழுதிக்கலாம். இதில் ஸ்க்ரிப்ட்டை மாற்றி எழுதும் வேலையைதான் நிரூப் செய்திருக்கிறார் என கூறுகிறார் கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











