கமலுக்கு கொரோனா தொற்று என்று அறிவித்த பிக்பாஸ்..பதறிய ஹவுஸ்மேட்ஸ்..ஹாஸ்பிட்டலில் இருந்து பேசிய கமல்!

சென்னை: மருத்துவமனையில் இருந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் புதிய தொகுப்பாளரையும் அறிமுகப்படுத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்றைய எபிசோட் தொடங்கியதுமே லிவிங் ஏரியாவில் கமலை எதிர்பார்த்து அமர்ந்திருந்த ஹவுஸ்மேட்ஸிடம் பேசினார் பிக்பாஸ். அப்போது நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

கவலைப்பட வேண்டாம்

கவலைப்பட வேண்டாம்

கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டதால் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளதால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார் என ஹவுஸ்மேட்டுகளிடம் தெரிவித்தார்.

வெறும் வதந்தி

வெறும் வதந்தி

கமல் குறித்து பிக்பாஸ் அறிவித்ததுமே ஹவுஸ்மேட்ஸ் அப்செட் ஆயினர். தொடர்ந்து மருத்துவமனை டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளை சந்தித்ததார் கமல். அப்போது, வணக்கம் என்று ஆரம்பித்த கமல், மருத்துவமனை டிவியில் இருந்து சந்திக்கிறேன்.
கோவிட்டெல்லாம் வெறும் வதந்தி இன்று இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இது ஒரு செய்தி.

சமூதாய கடமையாக

சமூதாய கடமையாக

இன்னொரு அலை வரக்கூடும் என்ற ஞாபகமறதி உள்ளவர்களில் நானும் ஒருவனாகிவிட்ட நிலையில் எனக்கே வந்து என் மூலம் செய்தி சொல்ல வைத்திருப்பதை நான் சமூதாய கடமையாக உணருகிறேன். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதும், உங்கள் முன்பு பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் 2 தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பலன்தான் என்றார்.

விசாரித்த பிக்பாஸ்

விசாரித்த பிக்பாஸ்

அதற்கு விஞ்ஞானத்துக்கும் மருத்துவத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிக்பாஸ், கமல்ஹாசனை நலம் விசாரித்ததோடு அவர் விரைவில் நலம் பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வருக்கு நன்றி

முதல்வருக்கு நன்றி

தொடர்ந்து பேசிய கமல், தான் தற்போது நலமுடன் இருப்பதால் தான் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும் மருத்துவமனையில் இருந்து அனுமதி பெற்று பேசி வருவதாக தெரிவித்தார். மேலும் தனக்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பெரிய அரசியல் தலைவர்கள் என பலருக்கும் நன்றி கூறினார் நடிகர் கமல்ஹாசன்.

கட்டிப்பிடி வைத்தியம் தேவையில்லை

கட்டிப்பிடி வைத்தியம் தேவையில்லை

கொரோனா முற்றிலும் போய்விட்டது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்ற கமல், கட்டிப்பிடி வைத்தியம் நல்ல வைத்தியம் தான் ஆனால் இந்த நேரத்தில் தேவையில்லை என்றார். தொடர்ந்து உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கு வந்தது, இந்த செய்தியை சொல்லத்தான். எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள் என்றார்.

உதவி செய்யும் தோழி

உதவி செய்யும் தோழி

மேலும் உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்து நான் நலம் பெற வேண்டி வாழ்த்து கூறிய கலை உலக நண்பர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் நன்றி என்று கூறிய கமல்ஹாசன், தனக்கு பதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தனக்கு ஒரு தோழி உதவி செய்வதாக கூறியுள்ளார் என்று கூறி ரம்யா கிருஷ்ணனை அறிமுகப் படுத்தினார்.

பேர் சொல்லும் பிள்ளை

பேர் சொல்லும் பிள்ளை

தொடர்ந்து நிகழ்ச்சிக்குள் வந்த ரம்யா கிருஷ்ணன், நடிகர் கமல்ஹாசனுக்கு விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு நிறைய ரெஸ்பான்ஸிபிளிட்டி உள்ளது. உங்கள் அளவுக்கு கிட்ட நெருங்க முயற்சி செய்கிறேன் என்றார். இதனைக் கேட்ட கமல் இப்போது ரம்யாவை பார்க்கும் போது பேர் சொல்லும் பிள்ளை படம்தான் நினைவுக்கு வருகிறது.

நானும் வளர்ந்திருக்கிறேன்

நானும் வளர்ந்திருக்கிறேன்

அன்று ரம்யாவிடம் இருந்த பணிவு இன்றும் அப்படியே இருக்கிறது.
அன்றைய உங்கள் கனவு இப்போது நினைவாகி விட்டது. நீங்களும்
நட்சத்திர பட்டியலில் சேர்ந்து விட்டீர்கள் என்ற அதனைக் கேட்ட ரம்யா கிருஷ்ணன் உங்களோடு சேர்ந்து நானும் வளர்ந்திருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X