உங்களுடைய வாக்குகள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது... புதிர் போடும் கமல்.. பிக்பாஸ் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கனா முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திப்பது வாடிக்கை.
அந்த வகையில் இன்று சனிக்கிழமை என்பதால் ஹவுஸ்மேட்ஸ்களையும் பார்வையாளர்களையும் சந்திக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

ஒரு கதை சொல்லட்டுமா
இதற்கான முதல் புரமோ இன்று வெளியாகியுள்ளது. கடந்த 3ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக போட்டியாளர்கள் குறித்து பார்வையாளர்களும் சக போட்டியாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது.

முதல் எவிக்ஷன் புராசஸ்
இதில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை ஷேர் செய்தனர். ஒவ்வொரு போட்டியாளரின் கதைக்கும் சக போட்டியாளர்கள் ரேட்டிங் கொடுத்தனர். அதற்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் முதல் எவிக்ஷன் புராசஸ்ஸும் நடைபெற்றது.

யார் இந்த வாரம் வெளியேறுவார்கள்?
இதில் தாமரை செல்வியையும் பாவனி ரெட்டியையும் தவிர மற்ற 15 ஹவுஸ்மேட்டுகளும் எவிக்ஷன் புராசஸ்ஸிற்கு தேர்வாகியுள்ளனர். அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள்? யார் யார் டேஞ்சர் ஸோனில் உள்ளார்கள் என பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இன்றிலிருந்தே பார்ப்போம்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பேசும் கமல், கடந்து வந்த பாதை டாஸ்க் மற்றும் எவிக்ஷன் புராசஸ் குறித்து பேசியுள்ளார். மேலும் பார்வையாளர்களாகிய நீங்கள் அளித்துள்ள வாக்குகள் இந்த வீட்டில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இன்றிலிருந்தே பார்ப்போம் என்றும் கூறியுள்ளார் கமல்.

காணாமல் போனவர்கள் யார்?
இதன் மூலம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் காணாமல் போனவர்கள் யார்? பெஸ்ட் பர்ஃபாமர் யார் என்று குழுக்களாக பிரிந்து கருத்துக்கணிப்பு நடத்துமாறும் கூறி கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ்.

கடந்த வாரம் நடந்த சம்பவங்கள்
இதற்கான முடிவுகளையும் நடிகர் கமல்ஹாசனே இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் அறிவிக்கும் பட்சத்தில் அந்த போட்டியாளர் பிக்பாஸ் வீட்டின் ஜெயிலுக்குள் அனுப்பப்படுவார் என தெரிகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள் குறித்தும் கமல் விவாதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











