செம கிழி... திட்டமே போடலனு சொன்னீங்க... நாங்க எல்லாருமே பார்த்தோம்.. பாவனியை வெளுக்கும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்டுகளை சந்திப்பது வழக்கம்
பார்வையாளர்கள் முன்னிலையில் அகம் டிவி வழியாக பிக்பாஸ் வீட்டில் அந்த வாரம் முழுவதும் நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிப்பார்.

அகம் டிவி வழியாக
அப்போது பிக்பாஸ் வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும் பஞ்சாயத்து செய்யப்படும். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளை பார்வையாளர்கள் முன்னிலையில் சந்திக்கிறார்.

காயின் திருடப்பட்டது குறித்து
இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவிலேயே நடிகர் கமல் ஹாசன், தாமரை செல்வியிடம் இருந்து காயின் கைப்பற்றப்பட்டது குறித்தும், அதற்கான முறை விதி மீறலா என்பது குறித்தும் பேசப் போகிறார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பாவனியை வெளுக்கும் கமல்
இதில் காயின் விவகாரத்தில் பாவனியை செம வெளு வெளுக்கிறார் கமல் ஹாசன். தாமரையின் காயினை திருட ஸ்ருதி, பாவனியிடம் ஹெல்ப் கேட்டார். அதற்கு ஓகே சொன்ன பாவனி, தாமரை உடை மாற்றும் அறைக்கு சென்று டவலை வைத்து மறைத்துக் கொண்டார்.

ஸ்ருதிக்கு உதவிய பாவனி
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஸ்ருதி தாமரையின் காயிணை திருடினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு பெரும் பிரளயமே வெடித்தது. காயினை எடுத்தது சரிதானா என க்ளாரிட்டி கொடுக்குமாறு ஸ்ருதியும் பாவனியும் பிக்பாஸிடம் கேட்டனர்.

மவுனம் காத்த பிக்பாஸ்
ஆனால் வாயே திறக்காமல் இருந்த பிக்பாஸ் சனிக்கிழமை கமல் சார் பேசுவார் என்பதை போல் மவுனம் காத்து வந்தார். இந்த வாரம் முழுக்கவுமே இதே பிரச்சனைதான் இருந்தது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசுகிறார் நடிகர் கமல்ஹாசன்.

நீங்க போட்ட திட்டத்த பார்த்தோம்
இரண்டாவது புரமோவில் அவர் பேசுவதாவது, பாவனி உண்மையை பேசும் போது யாரை பார்த்து சொன்னாலும் அதே மேட்டர்தான். ஆனால் நீங்க பேசும் போது திட்டமே போடலைங்க என்றீர்கள். ஆனால் நாங்க பார்த்தது என்னன்னா.. நீங்களும் அவங்களும் நான் இப்படி செய்கிறேன் அப்படி செய்யப் போகிறேன்.. அப்போது எடுத்துக்கொள் என்று கூறியதை எல்லோரும் பார்த்தார்கள் என்றார்.

டவுட் இருக்கும் போதுதான்
அப்போது குறுக்கிட்ட பாவனி, இல்ல சார் பிளானே போடல.. எங்களுக்கு தெரியவும் தெரியாது... என்று மறுத்தார். ஆனால் விடாத கமல், நாம் செய்தது சரியா தவறா என்ற டவுட் இருக்கும் போதுதான் மாற்றி மாற்றி பேச வேண்டியிருக்கும் என்று கூறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ.

குறும்படத்தை போட்டுவிடுங்கள்
இதனை பார்த்த ரசிகர்கள், ஏன் இவ்வளவு குழப்பம்? பேசாமல் ஒரு குறும்படத்தை போட்டுவிடுங்கள் ஆண்டவரை என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என்பது புரமோவிலேயே தெரிகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











