கிரீடத்தை தூக்கியெறிந்த விவகாரம்.. இதுவே தொட்டாச்சினிங்கிக்கான குணாதிசயம்தான்.. விளாசி விட்ட கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கிரீடத்தை தூக்கியெறிந்த இசைவாணியை நடிகர் கமல்ஹாசன் இதுவே தொட்டாச்சினிங்கிக்கான குணாதிசயம் என்று விளாசிவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பிக்பாஸ் விருது விழா நடை பெற்றது. இதில் பெஸ்ட் பிளேயர், பெஸ்ட் எண்டெர்டெய்னர், பெஸ்ட் டிரெஸ்டு என விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் பெஸ்ட் பிளேயருக்கான விருது நிரூப்புக்கும், பெஸ்ட் எண்டெர்டெய்னருக்கான விருது ராஜுவுக்கும் பெஸ்ட் டிரெஸ்டுக்கான விருது அக்ஷாராவுக்கும் வழங்கப்பட்டது.

விருதை ஏற்கவில்லை
இதனை தொடர்ந்து போட்டியாளர்களின் கேரக்டரை கூறும் வகையில் சில கிரீடங்கள் வழங்கப்பட்டன. டம்மி பீஸ், ஜால்ரா, தொட்டாச்சினிங்கி, வெத்து வேட்டு, சிம்பிளி வேஸ்ட், சகுனி, விஷ பாட்டில் என விருதுகள் வழங்கப்பட்டன. தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை பெரும்பாலான போட்டியாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

விஷ பாட்டில்
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருந்து வரும் பாவனி - அக்ஷரா, இசைவாணி - இமான் அண்ணாச்சி ஆகியோரின் மோதல்கள் இந்த விருது நிகழ்ச்சியிலும் வெளிப்பட்டது. அதன்படி விஷ பாட்டில் என்ற விருதை பாவனி ரெட்டி, அக்ஷராவுக்கு வழங்கினார்.

இசைவாணிக்கு தொட்டாச்சினிங்கி
வெத்துவேட்டு என்ற விருதை இசைவாணி இமான் அண்ணாச்சிக்கு கொடுத்தார். தொடர்ந்து இமான் அண்ணாச்சி இசைவாணிக்கு தொட்டாச்சினிங்கி என்ற விருதை வழங்கினார். இதனை விருப்பமில்லாமல் வாங்கிய இசைவாணி மேடையிலயே நான் தொட்டாட்சினிங்கி அல்ல, எதுவாக இருந்தாலும் ஓபனாக பேசுவேன் என்று சொடக்கு போட்டு பேசினார்.

கிரீடத்தை வீசியெறிந்த இசைவாணி
மேலும் அந்த கிரீடத்தை அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி தனது இருக்கையில் அமர சென்ற இசைவாணி தனக்கு வழங்கப்பட்ட கிரீடத்தை டேபிளில் வீசியெறிந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த விவகாரம் குறித்து விவாதித்தார் கமல் ஹாசன். ஒவ்வொரு போட்டியாளரையும் உங்களுக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டார்.

இதுவே அந்த குணாதிசயம்தான்
அந்த வகையில் இசைவாணியின் டெர்ன் வந்தபோது அவரிடமும் கேட்டார் கமல். அப்போது எனக்கு அண்ணாச்சி தொட்டாச்சினிங்கி என்ற கிரீடத்தை கொடுத்தார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அதனால்தான தூக்கி எறிந்து விட்டு சென்றீர்களா என்று கேட்ட கமல், இதுவே தொட்டாச்சினிங்கிக்கான குணாதிசயம்தான் என்றார்.

வயதுக்கு கூட மரியாதை இல்லை
இசைவாணி வாரா வாரம் கமலிடம் வாங்கிக் கட்டி கொள்கிறார். உங்களுக்கு டாஸ்க் புரிகிறதா இல்லையா என்று கேட்டு சனிக்கிழமை எபிசோடில் டேமேஜ் செய்தார். நேற்று தொட்டாச்சினிங்கி என்றே கூறிவிட்டார் கமல். இசைவாணி இமான் அண்ணாச்சியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் நடந்து கொள்கிறார்.

என் அப்பா மாதிரி
இமான் அண்ணாச்சியை டேமேஜ் செய்ய வேண்டும் என்றால் முதல் ஆளாய் வந்து நிற்கிறார் இசைவாணி. செய்வதை எல்லாம் செய்துவிட்டு நீங்கள் என் அப்பா மாதிரி என்று வேறு கூறி வருகிறார். இதனால் சமூக வலைதளங்களிலும் அதிக விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார் இசைவாணி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











