தாமரையின் காயின் விவகாரம்.. குறும்படம் இல்லாமல் பாவனியின் முகத்திரையை கிழித்த கமல்!

சென்னை: தாமரையின் காய்ன் திருடப்பட்ட விவகாரத்தில் குறும்படமே இல்லாமல் பாவனியின் முகத்திரையை கிழித்து விட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த பெரிய சம்பவம், தாமரையின் காய்ன் திருடப்பட்டதுதான். தாமரை செல்வி ஆடையை மாற்றிய போது ஸ்ருதி அவரது காய்னை திருடினார்.

ஸ்ருதி காய்னை திருடுவதற்கு பாவனி உதவி செய்தார். தான் காயினை எடுக்க உதவுமாறு பாவனியிடம் கூறினார் ஸ்ருதி.

சம்பந்தமே இல்லை

சம்பந்தமே இல்லை

இதனைக் கேட்ட பாவனி, தான் அவரை தாமரையை திசை திருப்புவதாக கூறி உடை மாற்றும் அறைக்குள் சென்று டவலை வைத்து மறைக்க, ஸ்ருதி காயினை எடுத்து சென்றார். ஆனால் இது பிரச்சனையான பிறகு, தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என அந்தர்பல்டி அடித்தார் பாவனி.

தாமரையிடம் கேட்ட கமல்

தாமரையிடம் கேட்ட கமல்

இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் பாவனி. இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த கமல் காய்ன் விவகாரம் குறித்து தாமரையிடம் கூறினார். தாமரையும் நடந்ததை விளக்கினார். தான் வெளியே வர முடியாத சூழலில் இருந்ததை பயன்டுத்தி காய்னை எடுத்துவிட்டார்கள் கண்ணீர் விட்டார்.

விளையாடினேன்

விளையாடினேன்

இதனை தொடர்ந்து ஸ்ருதியிடம் என்ன நடந்தது என கேட்டார் கமல். அப்போது பேசிய ஸ்ருதி தான் விளையாட வேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால் அப்படி ஒரு சூழலில் இருக்கும் போது எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் உள்ளே சென்ற போது இருந்தது நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்றார்.

கமலிடம் பொய் சொன்ன பாவனி

கமலிடம் பொய் சொன்ன பாவனி

அதனைக் கேட்ட கமல் அந்த அறையில் கேமரா வைக்காததற்கான காரணம், பிரைவேசி ரூம் என்பதால் தான் என்றார். இதனை தொடர்ந்து பாவனியிடம் கேட்டார் கமல், அப்போது தான் எதார்த்தமாக அறைக்குள் சென்றதாகவும் , அவரை மறைக்க வேண்டும் என்றுதான் டவலை காட்டினேன்.

அடித்துக் கூறிய பாவனி

அடித்துக் கூறிய பாவனி

டவலை வைத்து மறைத்து திசை திருப்பும் எண்ணத்தில் செய்யவில்லை என்றார். இதனைக் கேட்ட கமல் திசை திருப்பும் எண்ணத்தில் மறைக்கவில்லையா என்று திருப்பி திருப்பி கேட்டு உறுதிப்படுத்தினார். அதற்கு இல்லவே இல்லை, எந்த பிளானும் இல்லை என அடித்துப் பேசினார் பாவனி.

செம கிழி கிழித்த கமல்

செம கிழி கிழித்த கமல்

பின்னர் பேசிய கமல் , நீங்கள் திட்டமே போடவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வெளியில் திட்டம் போட்டதை நாங்கள் பார்த்தோம். உங்களால் பொது வெளியில் ஒத்துக் கொள்ள முடியாத எதையும் செய்யாதீர்கள். ஒத்துக்கொள்ள முடியும் என்றால் செய்யுங்கள் என செம கிழிகிழித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X