சின்னப்பொண்ணுக்கு எதற்காக டிஸ்லைக் கொடுத்தீங்க? ராஜுவை விளாசிய கமல்!
சென்னை: சின்னப்பொண்ணுவின் கதை பிடிக்கவில்லை என கூறியதற்கு காரணம் என்ன என ராஜுவை கேட்டு விளாசினார் கமல்.
கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுஸ் மேட்டுகளை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்.
இதில் இந்த வாரம் முழுக்க நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து விவாதித்தார். குறிப்பாக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் போட்டியாளர்கள் பகிர்ந்த தங்களின் கதைகள் குறித்து ரிவ்வியூ செய்தார் கமல்.

சின்னப்பொண்ணு சொன்ன கதை
அந்த வகையில் தான் கடந்து வந்த பாதையையும் தான் பட்ட கஷ்டங்களையும் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு கூறினார். சிறு வயது முதல் பட்ட துன்பங்களை கூறிய சின்னப்பொண்ணு, திருமணத்திற்கு பிறகும் கை குழந்தையுடன் தான் பட்ட வேதனையை தெரிவித்தார்.

டிஸ்லைக் கொடுத்த ராஜு
அவரது கதையை கேட்ட பலரும் சின்னப்பொண்ணுவுக்கு ஹார்ட், லைக் ஆகியவற்றை ரேட்டிங்காக கொடுத்தனர். ஆனால் ராஜு டிஸ்லைக் செய்தார். கலைஞன் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்றும், நீங்கள் கதை சொன்ன விதம் எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.

டிஸ்லைக் கொடுத்தா ஏத்துப்பிங்களா?
இந்நிலையில் இன்றைய எபிசோடில் சின்னப்பொண்ணு கதைக்கு டிஸ்லைக் கொடுத்தது ஏன் என்று ராஜூவிடம் நேரடியாக கேட்டார் கமல். மேலும் உங்களின் சோகக்கதையை கேட்டுவிட்டு டிஸ்லைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்றும் கேட்டு விளாசினார்.

நான் தவறாக சொல்லவில்லை
இதனை சற்றும் எதிர்பாராத ராஜு விழி பதுங்கி போனார். பின்னர் விளக்கம் அளித்த ராஜு தனக்கு கோர்வையாக சொன்னால் தான் புரியும் என்றும் கூறினார். இதனைக் கேட்ட கமல், உங்களுக்கு புரியாமல் போனதற்கு உங்கள் வயதும் ஒரு காரணம் என வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றினார். அதேநேரத்தில் நீங்கள் டிஸ்லைக் கொடுத்ததை நான் தவறாக சொல்லவில்லை என்றும் அரவணைத்தார்.


Click it and Unblock the Notifications











