நானெல்லாம் பொம்பள பின்னாடிதான் ஒளிஞ்சுருக்கேன்... நிரூப்பை விளாசிய கமல்!
சென்னை: பொம்மை டாஸ்க்கில் பொம்பள பின்னாடி ஒளியுற என்று கூறிய நிரூப்பை தனது ஸ்டைலில் விளாசி விட்டார் கமல்ஹாசன்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்றொரு போட்டியாளருக்காக விளையாடினர். இந்த டாஸ்க்கின் போது நிரூப்பால் சில குளறுபடிகள் ஏற்பட்டது.

வார்த்தைகள் தடித்தன
பல இடங்களில் போட்டியாளர்களுக்கு இடையே வார்த்தைகள் தடித்தன. அந்த எபிசோட் பெரும்பாலும் மியூட்டுடன் பீப் சத்தத்துடனுமே இருந்தது. அந்த அளவுக்கு அநாகரிகமாக பேசிக் கொண்டனர் ஹவுஸ்மேட்ஸ். குறிப்பாக நிரூப், சிபி, வருண், ஆகியோருக்கு இடையே நடந்த சண்டை நிகழ்ச்சியின் தரத்தையே குறைத்து விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்தன.

யாருக்கு பிடிக்கவில்லை?
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பொம்மை டாஸ்க்கின் போது நடந்த சம்பவங்கள் குறித்து ஹவுஸ்மேட்டுகளுடன் விவாதித்தார் கமல் ஹாசன். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்டட் இல்லை என்று கூறிய கமல், நிரூப் விளையாடிய விதம் யாருக்கு பிடிக்க வில்லை, யாருக்கு பிடித்திருந்தது என கேட்டார்.

இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தது
அப்போது பேசிய வருண், என்னை டார்கெட் செய்து முடிக்க வேண்டும் என்றுதான் விளையாடினார் என்று கூறி தனக்கு நிரூப் விளையாடிய விதம் பிடிக்கவில்லை என்றார். இதேபோல் அக்ஷரா மற்றும் பிரியங்கா ஆகியோரும் அவர் விளையாடிய விதம் பிடிக்கவில்லை என்றனர். ஆனால் ராஜு, நிரூப் விளையாடியது இன்ட்ரெஸ்ட்டிங்காக இருந்தது என்றார்.

பொம்பள பின்னாடி ஒளிஞ்சுருக்கேன்
தொடர்ந்து பேசிய கமல் இதில் பொம்பள பின்னாடி ஒளியிற என்று நிரூப் கூறியதை அலசினார். அப்போது நானெல்லாம் சிறுவயதில் பொம்பள பின்னாடிதான் ஒளிஞ்சுருக்கேன். யாராவது விருந்தாளி வந்தால் போதும் அம்மா பின்னாடி போய் ஒளிந்து கொள்வேன், வெட்கப்படாதே.. வெளியே வா என்பார்கள் என்று பட்டும் படாமல் நிரூப்பை விளாசினார்.

பெண் கையில் உள்ளது
மேலும் ஒரு பெண் இந்திரா காந்தியாவதும் வேலு நாச்சியாராவதும் அவர் கையில் தான் இருக்கிறது என்ற கமல், பெண்ணை பெண் என்று சொல்லும் விதத்தில் தான் உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் வார்தையை அளந்து பேசுவதின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டேன் என்று கூறியும் ஹவுஸ்மேட்டுகளை மறைமுகமாக எச்சரித்தார்.


Click it and Unblock the Notifications











