இந்த வாரமும் காப்பாற்றப்பட்ட அபினய்... பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னமும் நிகழ்ச்சியில் பரபரப்போ சுவாரசியமோ என எதுவும் இல்லை.
கடந்த சீசன்கள் எவ்வளவோ சிறப்பு என்று சொல்லும் அளவுக்கே உள்ளது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. போட்டியாளர்களில் பெரும்பாலானோர் சேஃப் கேம் ஆடி வருகின்றனர்.

ஒரிஜினாலிட்டியை காட்டாமல்
பலர் இன்னும் மாஸ்க்கை கழட்டாமல், ஒரிஜினாலிட்டியை வெளியே காட்டாமல் ஒளிந்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் பெரும்பாலானோர் கடந்த 4 சீசன்களையும் பார்த்துவிட்டு பக்கா பிரிப்பரேஷனுடன் வந்துள்ளனர் என்பது அவர்களின் ஆட்ட முறையிலேயே தெரிகிறது.

நல்ல போட்டியாளர்கள்..
இதனாலேயே போட்டியாளர்களுக்குள் உண்மையிலேயே சண்டை வந்தால் கூட அது ஃபேக் என்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு ஏற்றது போலவே தங்களுக்கு வேண்டியவர்கள், சிபாரிஸில் வந்தவர்கள் என பர்ஃபாமன்ஸ் கொடுக்காதவர்களை வீட்டுக்குள் வைத்துக் கொண்டு நல்ல போட்டியாளர்களை வெளியேற்றி வருகிறார்கள்.

இந்த வாரமும் வெளியான தகவல்
இதனால் நிகழ்ச்சி மீதான நம்பிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் எவிக்ஷன் நடைபெறு வழக்கம்.

ஒரு நாள் முன்னதாகவே..
ஆனால் சனிக்கிழமையே அதற்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்பதால் சனிக்கிழமையே எவிக்ட்டான போட்டியாளர் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த சீசனில் இதுவரை வெளியேறிய அனைத்து போட்டியாளர்கள் குறித்த தகவலும் ஒரு நாள் முன்னதாகவே தெரிந்து விட்டது.

மதுமிதா எவிக்ட்டட்..
இந்த வாரமும் எவிக்ட்டான போட்டியாளர் குறித்த தகவல் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. இந்த வாரம் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகியோர் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றனர். அவர்களில் மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

இசையால் எகிறிய வாக்கு
இந்த வாரம் இமான் அண்ணாச்சியை வெளியேற்றி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இசைவாணி அண்ணாச்சியிடம் நடந்து கொண்ட விதம் அண்ணாச்சியின் வாக்குகளை நேற்று ஒரே நாளில் எகிற வைத்து விட்டது.

அபினய் எதுவும் செய்யவில்லை
இதனால் அபினய் மற்றும் மதுமிதா ஆகிய இருவரே கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தனர். இதனால் அவர்களில் ஒருவர்தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கபட்டது. நெட்டிசன்கள் பலரும் அபினய் இதுவரை எதுவும் செய்யவில்லை ஆகையால் அவரை வெளியேற்ற வேண்டும் என கூறி வந்தனர்.

ஜெர்மனி ஃபேஷன் டிசைனர்
கடந்த வாரம் ஸ்ருதி வெளியேற்றப்பட்ட போது கூட அபினய்யை வெளியேற்றி இருக்கலாம் என கூறினர் நெட்டிசன்கள். இந்நிலையில் இந்த வாரமும் அபினய் காப்பாற்றப்பட்டுள்ளார். மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.
மதுமிதா ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கை தமிழ் ஆவார். இவர் ஜெர்மனியில் மாடலாகவும் ஃபேஷன் டிசைனராகவும் உள்ளார்.


Click it and Unblock the Notifications











