நமீதாவுக்கு பதில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபலம் இவர்தான்.. ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்!

சென்னை: நமீதா மாரிமுத்துவுக்கு பதில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி விஜய் டிவியில் தொடங்கியது. இதில் முன் எப்போதும் இல்லாத அளவாக 18 போட்டியார்கள் பங்கேற்றனர்.

அவர்களில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆவார்.

முதல் திருநங்கை

முதல் திருநங்கை

பிக்பாஸ் வரலாற்றில் ஒரு திருநங்கை பங்கேற்றது இதுதான் முதல் முறை ஆகும். பல அழகிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற நமீதா மாரிமுத்து முதல் திருநங்கையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தான் பட்ட துன்பங்களை எல்லாம் கண்ணீர் மல்க கூறி கலங்க வைத்தார்.

வெளியேறிய நமிதா மாரிமுத்து

வெளியேறிய நமிதா மாரிமுத்து

இதனால் சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வெளியான புரமோக்களில் நமீதா மாரிமுத்து இடம் பெறவில்லை. இதனை தொடர்ந்து நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

உடல் நிலை சரியில்லாததால்

உடல் நிலை சரியில்லாததால்

இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிய போது, பார்வையாளர்களுக்கு அறிவித்த பிக்பாஸ் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரி முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து நமீதா மாரிமுத்து உடல் நிலை சரியில்லாததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது.

நமீதாவுக்கு ரெட் கார்டு?

நமீதாவுக்கு ரெட் கார்டு?

மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் சண்டை போட்ட நமீதா மாரிமுத்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து உடைத்தாகவும் தகவல் வெளியானது. இதனாலேயே அவருக்கு ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வெளியேற்றியதாகவும் கூறப்பட்டது.

மீண்டும் வருவார்

மீண்டும் வருவார்

மேலும் நமீதா மாரிமுத்துவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பிக்பாஸ் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் 14 நாட்கள் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என்றும் தகவல் வெளியானது.

பிக்பாஸ் வீட்டில் அடிதடி

பிக்பாஸ் வீட்டில் அடிதடி

இதனிடையே பிக்பாஸ் வீட்டில் அடிதடி சண்டை நடந்ததாகவும் இதில் நமீதா காயமடைந்தார் என்றும் இதன் காரணமாகவே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நமீதா இடத்தை நிரப்பும் வகையில் வேறு ஒரு திருநங்கை போட்டியாளரை கொண்டுவர நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்குள் மிலா?

பிக்பாஸ் வீட்டுக்குள் மிலா?

அதன்படி நடிகை ஷகீலாவின் மகளான மிலாவை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிலா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் எதிர்பாராதவிதமாக மிலா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில் மிலா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார் என பரவும் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X