பாத்ரூம் ஏரியாவில் எல்லை மீறிய நிரூப்... விளக்குமாறால் அடித்த மதுமிதா.. பிக்பாஸ் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பாத்ரூமில் ஷேவிங் ஃபோமை எடுத்து எல்லை மீறிய நிரூப்பை மதுமிதா விளக்குமாறால் அடித்தது பகீர் கிளப்பியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட ஊரு விட்டு ஊரு வந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் கிராமத்தினர் நகரத்தினர் என இரண்டு குழுக்கலாக பிரிக்கப்பட்டனர். இந்த வாரம் நெருப்பின் வாரம் என்பதால் இதில் நெருப்பை வைத்து பல போட்டிகள் நடத்தப்பட்டன.

நெருப்பு காயினை கைப்பற்றி

நெருப்பு காயினை கைப்பற்றி

அதன் ஒரு பகுதியாக பட்டிக்காடா பட்டணமா என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்காக பிக்பாஸ் வீடு விவாத மேடையாக மாற்றப்பட்டு பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டது. தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டது. நெருப்பு காயினை கைப்பற்றிய இசைவாணியே அனைத்து போட்டிகளையும் நடத்தினார்.

நகரத்தினர் அணி வெற்றி

நகரத்தினர் அணி வெற்றி

ஒரு வழியாக நேற்றுடன் ஊரு விட்டு ஊரு வந்த டாஸ்க் நிறைவு பெற்றது. இதில் அதிக பிக்பாஸ் கரன்சியை வைத்திருந்த நகரத்தினர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மெட்ரஸஸ் நிறுவனத்தின் ஸபான்சர் போட்டி நடைபெற்றது.

உடைந்த பவுல்

உடைந்த பவுல்

பின்னர் பாத்ரூம் ஏரியாவில் அமர்ந்திருந்த மதுமிதாவிடம் பவுலில் இருந்த எறும்பை காட்டி பயமுறுத்தினார் நிரூப். அதனை தடுக்க முயன்ற பிரியங்கா பவுலை தட்டிவிட, கீழே விழுந்து உடைந்தது பவுல். இதனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார் பிரியங்கா.

ஏய் என்ன வேணும்

ஏய் என்ன வேணும்


அப்போது ஷேவிங் ஃபோமை எடுத்து பிரியங்கா முதுகில் அடித்தார் நிரூப். தொடர்ந்து இதேபோல் மாறி மாறி இருவரும் ஷேவிங் ஃபோமை பூசிக் கொண்டனர். அப்போது உன்னை நான் காப்பாற்றினேன் என்னை நீ காப்பாற்று என மதுமிதாவிடம் பிரியங்கா கூற ஏய் என்ன வேணும் என நிரூப்பை அதட்டினார் மதுமிதா.

விளக்குமாறால் அடி

விளக்குமாறால் அடி

பின்னர் கீழே கிடந்த விளக்கமாறை எடுத்து நிரூப்பை அடித்தார். டேய் என்னடா போடா எருமை என வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி திட்டினார். தொடர்ந்து ஷேவிங் ஃபோமை எடுத்து விளையாடினர். வீணாக்கினர். இதனைக் கவனித்த பிக்பாஸ், மைக்கில் தண்ணியோ வேற எந்த திரவமோ படமால் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

மைக் பத்திரம்

மைக் பத்திரம்

பொருட்கள் சேதப்படுத்துவது குறித்து ஏதாவது பேசுவார் என்று பார்த்தால், மண்டை பத்திரம் என்பதை போல் மைக் பத்திரம் என கூறி முடித்தார். இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் விளையாட பர்மிஷன் கொடுத்தது போல் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X