எங்க அம்மா அப்போ செய்ததை இப்போ செய்திருந்தால் 'சைல்டு அப்யூஸ்' கலங்க வைத்த நாடியா சங்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாடியா சங் தனது அம்மாவே தன்னை போலீஸில் மாட்டி விட்டு அடி வாங்க வைத்ததாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடிலும் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் முதல் நபராக நிரூப் தனது கதையை பகிர்ந்து கொண்டார்.

இரண்டாவதாக அபினய் வட்டி தன் கதையை கூறினார். அ

வரை தொடர்ந்து நாடியா சங் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார்.

மெத்தையில் படுத்ததில்லை

மெத்தையில் படுத்ததில்லை

அவர் பேசியதாவது, என் கணவர் சைனீஸ்.. அவரை திருமணம் செய்த பிறகு தான் என் பெயர் நாடியா சங் ஆனது. அதற்கு முன்பு என் அப்பா அம்மா வைத்த பெயர் அரு ஜெயலக்ஷ்மி. ஒரு 17 வயது வரை கட்டில் மெத்தையில் படுத்ததில்லை. ஒரு ரூம்மில்தான் படுத்திருப்போம். அப்பா தண்ணியடிப்பார். அதனால் சொந்தங்கள் மதிக்க மாட்டார்கள்.

போலீஸ்கிட்ட அடிவாங்க வச்சாங்க.

போலீஸ்கிட்ட அடிவாங்க வச்சாங்க.

அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவ்ளோ அடிச்சுருக்காங்க. இப்போ ஒரு அம்மா அப்படி அடிச்சா அது சைல்டு அப்யூஸ். 16 வயசுக்குள்ள நான் என் அக்கா, என் தங்கச்சி மூன்று பேரும் பலமுறை வீட்டை வீட்டு ஓடி போயிருக்கோம். அம்மா அடிச்ச அடி தாங்க முடியாம. எங்க அம்மாவ நான் எப்போ முழுசா வெறுத்தேன்னா போலீஸ்கிட்ட அடிவாங்க வச்சாங்க.

ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்தேன்

ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்தேன்

எங்களுக்கு அப்புறம் பிறந்த 4 தம்பி தங்கச்சிங்களுக்கு கொடுத்த அன்பையும் சுதந்திரத்தையும் எங்களுக்கு கொடுக்கல. இப்போ இருக்குற எங்க அம்மா அப்போ இருந்திருந்தா. நான் கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்.
15 வயசுல இருந்தே ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்தேன். படிக்க வசதியில்ல.

என் அம்மாவ எதிர்த்த ஒரு ஆம்பளை

என் அம்மாவ எதிர்த்த ஒரு ஆம்பளை

ஒருத்தர் என்னை பிடிச்சுருக்குன்னு சொன்னாங்க. என் அம்மாக்கிட்ட பேசுங்கன்னு சொன்னேன். எங்க அம்மாக்கிட்ட கேட்டாங்க. அன்னைக்கே எனக்கு தீபாவளி நடந்துச்சு. அடுத்த நாளே என்னை வீட்டிலேருந்து கூட்டிட்டு போய்ட்டார் என் கணவர். என் அம்மாவ எதிர்த்த ஒரு ஆம்பளை அப்படிங்கிற தைரியத்துல அவர் கூட போனேன்.

நான் அதை பார்த்து வரவில்லை

நான் அதை பார்த்து வரவில்லை

அவரு என்கிட்ட நான் படிக்கல, நான் முட்டாள்ன்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. நீயும் அப்படி சொல்லி என்னை விட்டு போயிடாதே என்றார். அதற்கு நான் நீங்கள் என்னை கூட்டிட்டு வரும் போது உங்கள் வேலைய பார்க்கவில்லை, படிப்பை பார்க்கவில்லை. அதை பார்த்து நான் உங்களுடன் வரவில்லை என்றேன்.

கை நிறைய சம்பளம்

கை நிறைய சம்பளம்


நாங்கள் திருமணம் செய்து கொண்ட போது என் அம்மா உருப்பட மாட்டேன் சொன்னாங்க. திருமணத்திற்கு பிறகு கிடைத்த வேலையெல்லாம் செய்தேன். ஃபிரண்ட் மூலமா வெள்ளக்கார ஆபிஸ்ல வேலை கிடைச்சுது. கை நிறைய சம்பளம். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகுதான் நான் என் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன்.

அவரை பெருமை படுத்ததான் வந்தேன்

அவரை பெருமை படுத்ததான் வந்தேன்


திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் முதல் ரன்னர் அப் ஆனேன். சின்ன வயசுல இருந்தே அம்மாவோட அப்பாவோட பாசம் கிடைக்கல. நாடியா சாங் எல்லாருக்கும் தெரியும். ஆனா சாங்கை யாருக்கும் தெரியாது. நான் இந்த உலகத்த விட்டு போறேன்னா அது என் கணவர் இல்லாத நாளாகதான் இருக்கும். அவருக்காகதான் நான் இங்கே வந்தேன். அவரை பெருமை படுத்ததான் நான் இங்கு வந்தேன்.. என்று கூறி கலங்க வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X