அபிஷேக் மீது கொலை காண்டில் இருக்கும் நாடியா சங்... என்ன வீடியோ ஷேர் பண்ணியிருக்காங்க பாத்தீங்களா?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறிய நாடியா சங், அபிஷேக் ராஜா குறித்து ஷேர் செய்துள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் மலேசியாவை சேர்ந்த மாடல் அழகியான நாடியா சங். மலேசிய தமிழரான நாடியா சங், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அம்மா ரொம்பவே கொடூரமானவர் என்று கூறினார்.

குறிப்பாக தன்னை போலீசாரிடம் மாட்டிவிட்டு தன்னை அடி வாங்க வைத்தார் என்று கூறி பரபரப்பை கிளிப்பினார். தனது கணவர்தான் தனக்கு எல்லாமும் என்று கூறிய நாடியா சங், அவரால் தான் தனது கனவுகள் நிறைவேறியதாக கூறினார்.

முதல் நபராக எவிக்ட்டான நாடியா

முதல் நபராக எவிக்ட்டான நாடியா

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றதே தனது கணவரை பெருமைப்படுத்துவதற்காகதான் என்று கூறிய நாடியா சங், தனது கணவரை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் என்பதே தனது நோக்கம் என்றார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறினார் நாடியா சங்.

 தாயாருடன் ஹேப்பி போஸ்

தாயாருடன் ஹேப்பி போஸ்

நாடியா சங்கை வெளியேற்றியது அநியாயம் என அதிருப்தி தெரிவித்தனர் அவரது குடும்பத்தினர். அதே நேரத்தில் நாடியா சங் சொன்ன கதையெல்லாம் பொய் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நாடியா சங் தனது தாயாருடன் மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து அவர் கூறியது பொய் என்றனர் நெட்டிசன்கள்.

வெளியேற்றப்பட்ட அபிஷேக்

வெளியேற்றப்பட்ட அபிஷேக்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது நபராக நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிஷேக் ராஜா வெளியேறினார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அப்பாடா நிம்மதி என பெருமூச்சு விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அபிஷேக் வெளியேறியது குறித்து மீம்ஸ்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாடியாவை வனிதாவுடன் ஒப்பிட்டு

நாடியாவை வனிதாவுடன் ஒப்பிட்டு

அபிஷேக் ராஜா, கமலிடமே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று கூறி விட்டு, பார்த்ததை போன்று பல விஷயங்களை பேசினார். இப்படி நடந்து கொண்டால் அடிக்கடி புரமோவில் இடம் பெறலாம், இந்த சீசனின் லாஸ்லியா மதுமிதாதான் என்றார். மேலும் நாடியா சங்கை பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் வனிதாவுடன் ஒப்பிட்டு பேசினார்.

எப்படி ஒப்பிட முடியும்?

எப்படி ஒப்பிட முடியும்?

இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததே இல்லை என்று கூறியவர் எப்படி முந்தைய சீசன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பேச முடியும் என்று கேட்டு வந்தனர். இந்நிலையில் அபிஷேக் ராஜா குறித்த ட்ரோல் வீடியோ ஒன்றை இணையத்தில் ஷேர் செய்து தெறிக்கவிட்டுள்ளார் நாடியா சங்.

நாடியா ஷேர் செய்த வீடியோ

நாடியா ஷேர் செய்த வீடியோ

அதாவது அந்த வீடியோவில் நாடியா சங்கை, வனிதாவுடன் ஒப்பிட்டு பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜா பேசியதையும், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று அவர் கூறியதையும் வைத்து ட்ரோலாக்கி உள்ளனர் நெட்டிசன்கள். அந்த ட்ரோல் வீடியோவை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நாடியா சங்.

செம காண்டில் இருக்கிறார்

செம காண்டில் இருக்கிறார்

இதனை பார்த்த நெட்டிசன்கள், அவர் இப்படி பொய் மேல் பொய் சொன்னதால் தான் அவரை கமல்ஹாசன் வச்சு செய்துள்ளார் என கூறி வருகின்றனர். மேலும் அபிஷேக் ராஜா மீது நாடியா சங் செம காண்டில் இருக்கிறார் போல என்றும் கூறி வருகின்றனர். அந்த வீடியோவை தொடர்ந்து வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக நேற்று வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X