சிக்கலில் பிக்பாஸ்... நமீதா வெளியேற இதுதான் காரணமா... தீயாய் பரவும் பகீர் தகவல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் என புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.

Recommended Video

Namitha Marimuthu BIGG BOSS விட்டு வெளியான அதிர்ச்சி காரணம்

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக்பாஸ சீசன் 5 நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் பங்கேற்றார். பல்வேறு அழகி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நமீதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் கூறி கதறினார் நமீதா மாரிமுத்து. தன் குடும்பத்தினரே தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததையும் தான் பட்ட பாட்டையும் கூறினார்.

நீங்க மாறுங்க முதல்ல

நீங்க மாறுங்க முதல்ல

திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாகவும் பிச்சை எடுக்கவும் காரணம் அவர்களின் பெற்றோர்தான் என்றும் கூறிய நமீதா, நீங்க மாறுங்க முதல்ல என்று கூறி கண்ணீர்விட்டார். நமீதாவின் இந்த பேச்சைக் கேட்டு பலரும் கண்ணீர் விட்டனர்.

வெளியேறிய நமீதா மாரிமுத்து

வெளியேறிய நமீதா மாரிமுத்து

ஒரே நாளில் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன் தினம் நமீதா மாரிமுத்து வெளியேறினார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் ரகளை

பிக்பாஸ் வீட்டில் ரகளை

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் என்ன என்று தெரியாமலும் குழம்பி வந்தனர். அதேநேரத்தில் பிக்பாஸ் வீட்டில் நமீதா மாரிமுத்து ரகளையில் ஈடுபட்டதாகவும் சக போட்டியாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பொருட்களை எல்லாம் உடைத்ததாகவும் கூறப்பட்டது.

உடல் நிலை சரியில்லை

உடல் நிலை சரியில்லை

இதன் காரணமாக ரெட் கார்டு கொடுத்து நமீதா மாரிமுத்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் நமீதா மாரிமுத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் விஜய் டிவி நிர்வாகம் அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

நமீதா மாரிமுத்துவுக்கு கொரோனா

நமீதா மாரிமுத்துவுக்கு கொரோனா

இந்நிலையில் நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் இதுதான் என ஒரு தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நமீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல்

பிக்பாஸ் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் நமீதா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களுக்கு பிறகு அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் கூறப்படுகிறது. நமீதா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உண்மை என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடருவதில் பெரும் சிக்கல் வரும்.

விளக்கம் அளித்தால் உண்மை தெரியவரும்

விளக்கம் அளித்தால் உண்மை தெரியவரும்

காரணம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் நிகழ்ச்சி தொடருவது சிக்கலாகி விடும். ஆகையால் நமீதா மாரிமுத்துவுக்கு என்ன ஆனது என்பது குறித்து அவர் தரப்பில் இருந்தோ அல்லது விஜய் டிவி தரப்பில் இருந்தோ தெரிவித்தால்தான் உண்மை தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X