இதுக்கா இவ்ளோ நேரம்? ராஜமாதா பிஜிஎம் கேட்டதும் கூஸ் பம்ப்ஸ்.. பிக்பாஸ் புரமோ.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த புரமோவை போடவா இவ்ளோ நேரம் என கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவர்தான் என பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட்டன.

கமல் ஓபனிங்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வழக்கத்திற்கு மாறாக ரொம்பவே தாமதமாக வெளியானது. இதில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து ஓபனிங் கொடுக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

வேற லெவல் இன்ட்ரோ
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், இதை போடவா இவ்ளோ நேரம் என்றும், ராஜ மாதா பிஜிஎம்மை கேட்டதும் உடம்பே சிலிர்த்து விட்டது என்றும் சூப்பர் சாய்ஸ் என்றும் பூரித்து வருகின்றனர். இன்றைய முதல் புரமோவை பார்த்த அந்த நெட்டிசன், பிக்பாஸ் தெலுங்குல நாகார்ஜூனாவுக்கு பதிலா ரம்யா கிருஷ்ணன் ஹோஸ்ட் பண்ணும் போது வேற லெவல் இன்ட்ரோ கொடுத்தாங்க... பிக்பாஸ் தமிழ்லேயும் கொடுத்து இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

உங்க பிக்பாஸ் நிகழ்ச்சியும்
இன்றைய முதல் புரமோ தாமதமானதை பார்த்த இந்த நெட்டிசன், இதை போடவா இவ்வளவு நேரம்... போங்கடா நீங்களும் உங்க பிக்பாஸ் நிகழ்ச்சியும் என பதிவிட்டுள்ளார்.

உடம்பே சிலிர்த்து விட்டது
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கெட் வெல் சூன் கமல் சார்... வேலைக்காக நீங்கள் செய்யும் டெடிக்கேஷன் எப்போதுமே டாப்... ரம்யா கிருஷ்ணன் மேம் உங்களை தமிழ் பிக்பாஸிலும் பார்ப்பது மகிழ்ச்சி வாழ்த்துகள்... சிவகாமி பிஜிஎம் ஒலிக்கும் போது உடம்பே சிலிர்த்து விட்டது என பதிவிட்டுள்ளார்.

அன்றே கணித்தார் அக்சரா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா கிருஷ்ணன் கெட் அப் போட்டு அன்றே கணித்தார் அக்சரா என கூறியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் மேம் சூப்பர்
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல் சார் நீங்க குணமாகி மீண்டும் வர வேண்டும் சார். ரம்யா கிருஷ்ணன் மேம் சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

யாருக்கும் தேவையில்லை...
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ராஜு காமெடி மூலம் எல்லா தவறுகளையும் மறைப்பார். இனி முடியாது
இவ்வளவு கேவலமாக கன்டென்ட் யாருக்கும் தேவையில்லை...
இதே கேள்வியை திருமணமான பிரியங்காவிடம் or அக்ஷராவிடம்
கேட்கும் மன உறுதி இருந்தால் நீங்கள் ஸ்ட்ராங் கன்டென்ட்.. மக்களை விடுங்கள்.. உங்கள் வீட்டிலும் டிவி பார்ப்பார்கள் ராஜு... என பதிவிட்டுள்ளார்.

தமிழை விட வித்தியாசம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் தெலுங்கு எப்போதும் தமிழை விட வித்தியாசம் மற்றும் கிரியேட்டிவ் என பதிவிட்டுள்ளார்.

லவ் பண்றீங்களா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கேள்வி கேட்டவனும் பதில் சொன்னவனும் சும்மா இருக்க இந்த பிரியங்கா இதில் ராஜு பெயரை டேமேஜ் பண்ணனும் என்று பட்ட பாடு இருக்கே அப்பப்பா முடியலை.. பாவனிக்கு உள்ளே சப்போர்ட் இல்லை என்பதே நிஜம். ப்ரெண்ட் ஆக பழகும் நிரூபிடம் பிரியங்காவை லவ் பண்றீங்களா என்று கேட்டா தெரியும் கேட்டவன் நிலைமை என பதிவிட்டுள்ளார்.

வலியும் வேதனையும்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கேவலமாக கேட்டுவிட்டு அப்பாவி முகத்துடன் இது தவறா என்று வேறு கேட்கிறார். இதுக்கு தாமரை ஜால்ரா வேறு இல்லன்னா இல்லைன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே என்கிறார். யாராவது உங்களை கேட்டிருக்க வேண்டும் தாமரை.
அப்போது தெரியும் மற்றவர் வலியும் வேதனையும்
கேம் கேம் கேம்.. என்னங்கடா வெங்காய கேம் என விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











