தாமரை அக்கா அல்டிமேட்... அந்த காமெடிதான் ஞாபகம் வருது.. பிக்பாஸ் புரமோவால் குஜாலான ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் தாமரை செல்வியும் பிரியங்காவும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதில், பிக்பாஸ் இந்த வாரம் வீட்டில் யார் எல்லா வேலையும் சிறப்பாக செய்தது? நல்லப்பிள்ளை யார் என்று கேட்பார், அதற்கு நீ யார் பெயரை சொல்வாய் என வீட்டின் கேப்டனான தாமரை செல்வியிடம் கேட்கிறார் பிரியங்கா.

தாமரை செல்வியின் பதில்

தாமரை செல்வியின் பதில்

அதற்கு மூன்று பேரின் பெயர்களையும் சொல்வேன் என தாமரை கூற, நாம ஃபிரண்ட்ஸ் தானே அப்போ உன்னால் எனக்கு லாபம் இருக்கணுமா? இல்லையா? இப்போ சொல்லு யார் பெயரை சொல்வாய் என்று கேட்கிறார் பிரியங்கா. அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் நாடியா என்கிறார் தாமரை.

கொண்டாடும் நெட்டிசன்ஸ்

கொண்டாடும் நெட்டிசன்ஸ்

இதனை எதிர்பார்க்காத பிரியங்கா செம ஷாக்காகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம காமெடி என கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, ஹீரோயின், வில்லி, காமெடியன் என மற்றவர்களை டார்கெட் பண்ணும் பிரியங்கா!.. என பதிவிட்டுள்ளார்.

 அண்ணனுக்கு ஒரு தோசை பார்சல்

அண்ணனுக்கு ஒரு தோசை பார்சல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை செல்வி அல்டிமேட்... அண்ணனுக்கு ஒரு தோசை பார்சல்.. எனக்கு அந்த காமெடி நியாபகம் வருது..

மெதுவா போட்டு வாங்குது..

மெதுவா போட்டு வாங்குது..

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா குறுகுறுகுறுன்னு இருக்கு... மெதுவா போட்டு வாங்குது.. அடடா.. என பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சி மட்டுமே

மகிழ்ச்சி மட்டுமே

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா, தாமரை செல்வி, அண்ணாச்சி, ராஜு இருக்கும் இடம் மகிழ்ச்சி மட்டுமே.. என பதிவிட்டுள்ளார்.

தாமரை அக்கா வேற லெவல்

தாமரை அக்கா வேற லெவல்

மூன்றாவது புரமோவில் பிரியங்கா கேட்ட கேள்விக்கு தாமரை செல்வி கூறிய பதிலை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை அக்கா வேற லெவல் காமெடி என பதிவிட்டுள்ளார்.

எப்போ ஃபன் பண்றாங்க?

எப்போ ஃபன் பண்றாங்க?

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா மற்றும் தாமரை எப்போ சீரியஸா இருக்காங்க? எப்போ ஃபன் பண்றாங்கன்னு கண்டு பிடிக்க முடியல என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு உருப்படியான புரமோ

ஒரு உருப்படியான புரமோ

மூன்றாவது புரமோவில் பிரியங்காவும் தாமரை செல்வியும் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு உருப்படியான புரமோ என பதிவிட்டுள்ளார்.

உள்ளே வந்திருக்காங்க போல

உள்ளே வந்திருக்காங்க போல

மூன்றாவது புரமோவில் பிரியங்கா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஏற்கனவே ஒத்திகை பார்த்துட்டுதான் உள்ளே வந்திருக்காங்க போலிருக்கே! என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா மைன்ட் வாய்ஸ்

பிரியங்கா மைன்ட் வாய்ஸ்

இன்றைய மூன்றாவது புரமோவில் பிரியங்கா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்த பாயாசத்தை யாருக்கு தரப்போற தெரியல... பிரியங்கா மைன்ட் வாய்ஸ் இப்படி தான் இருக்கும் இப்போ என பதிவிட்டுள்ளார்.

எல்லா அரசியலும் தெரியும் போல

எல்லா அரசியலும் தெரியும் போல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வரும் நாட்களில் பிரியங்கா அர்ச்சனாவை விட அதிக அளவில் எரிச்சலூட்டும் நபராக மாறப் போகிறார்.. என்றும், பெஸ்ட் பர்ஃபாமர் குறித்து பேசும்போது தாமரைக்கு ஒன்றும் தெரியாது என்று அவர் ஆதரவை பெற பிரியங்கா முயல்கிறார்... தாமரைக்கு எல்லாவித பிக்பாஸ் அரசியலும் தெரியும் போல... என்றும் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X