செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து.. ஸ்ருதிக்காக வருத்தப்படும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்ருதி எவிக்ட்டாகியுள்ளதாக தகவல் வௌயான நிலையில் நெட்டிசன்கள் ட்ரோல் வீடியோவை ஷேர் செய்து வருத்தப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 4 பேர் வெளியேறியுள்ளனர்.

முதல் நபராக நாடியா சங்
இதில் திருநங்கை நமீதா மாரிமுத்து தானாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் நபராக நாடியா சங், இரண்டாவது நபராக அபிஷேக் ராஜா, மூன்றாவது நபராக சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேறினர்.

இந்த வாரம் யார்?
இந்நிலையில் நான்காவது நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அபினய், ஐக்கி பெர்ரி மற்றும் மதுமிதா ஆகியோர் இதுவரை பெரிதாக எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை. இதேபோல் சக ஹவுஸ்மேட்டுகளுடன் பெரிதாக பழகவும் இல்லை.

ஸ்ருதி வெளியேற்றம்
இதனால் அவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ருதி வெளியேறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
செஞ்சோற்று கடன் தீர்க்க
ஸ்ருதி வெளியேறிய தகவலை அறிந்த நெட்டிசன்கள், அவர் வெளியேறிதற்கு காரணம் பாவனிதான் என்று கூறி வருகின்றனர். மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சந்தானமும் ஆர்யாவும் பேசிக் கொள்ளும் காட்சியை வைத்து செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

சாவ்காசம் சரி இல்லை
மேலும் ஸ்ருதி வெளியேறிதை கேட்டு சோகம் அடைந்துள்ள இந்த நெட்டிசன், ஸ்ருதிக்காக வருத்தப்படுகிறேன். ஸ்ருதி டாப் 7ல் ஒருவராக இருப்பார் என்று கூறினேன். ஆனால் அவரது சாவ்காசம் சரியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











