நிரூப் மேலதான் டவுட்டா இருக்கு... பிக்பாஸ் புரமோவை பார்த்து ஆருடம் கூறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றையை மூன்றாவது புரமேவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா கட்சிக்கு வாக்களித்த அந்த கருப்பு ஆடு யார் என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்காக பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தலா 4 பேர் என மூன்று கட்சிகளாக பிரிந்தது.
இவற்றில் இரண்டு கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை எதிர் கொண்டன. பிரியங்காவின் கட்சி தனி போட்டியிட்டது. ஆனால் பிரியங்காவின் கட்சி கூடுதலாக ஒரு ஓட்டை பெற்றுள்ளது.

யார் அந்த கருப்பு ஆடு?
இதனால் தங்கள் கட்சியில் இருந்து யார் பிரியங்கா கட்சிக்கு வாக்களித்தது என மண்டையை பிய்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவின் கட்சிக்கு வாக்களித்த அந்த கருப்பு ஆடு யாராக இருக்கும் என தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

2 ஓட்டுதான் வித்தியாசமா?
அந்த வகையில் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா கூட்டணி சேர்ந்தும் 2 ஓட்டுதான் வித்தியாசமா என கேட்டு பதிவிட்டுள்ளார்.

நிரூப் மேலதான் டவுட்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யார் அந்த
யார் அந்த கருப்பு ஆடு... நிரூப் மேல தான் டவுட்டா இருக்கு என பதிவிட்டுள்ளார்.

நிரூப் உருகிவிட்டார்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப் சீக்கிரமே பிரியங்காவுடன் சேர்ந்துவிடுவார் என்று எனக்கு தோன்றுகிறது. நேற்று பிரியங்காவும் நிரூப்பும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரியங்கா முதலைக் கண்ணீர் விட்டார்... அதில் நிரூப் உருகி விட்டார் என பதிவிட்டுள்ளார்.

எல்லா வலியையும் அழித்து விடும்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ராஜுவின் ஓட்டுதான் அது என்பதை போல் கத்தியால் குத்திட்டு மருந்தும் போட்டுவிட்டா எல்லாம் சரி ஆகிடும்... இந்த ஒரு ஓட்டு பாவனியின் எல்லா வலியையும் அழித்து விடும் என பதிவிட்டுள்ளார்.

சஞ்சீவை பிடிக்கவில்லை என்றார்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப்தான் அந்த கருப்பு ஆடு... சஞ்சீவை தனக்கு பிடிக்கவில்லை என்று நிரூப் தனது டீம்மிடம் கூறினார் என பதிவிட்டுள்ளார்.

5 வது ஓட்டு ராஜு ஓட்டு
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற தேர்தலில் உரக்க சொல் கட்சிக்கு விழுந்த 5 வது ஓட்டு ராஜு ஓட்டு என்று பிதிவிட்டுள்ளார்.

கமல் சார் விசாரியுங்கள்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வார இறுதியில் நீங்களே சண்டை போட்டுட்டு சமாதானமாயிட்டீங்க என்கிற சமாளிப்பு எல்லாம் வேண்டாம். கமல் சார் பாவனி பிரச்சனை மற்றும் பாத்ரூம் தூய்மை குறித்து விசாரியுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











