நீலாம்பரி மோட்ல வருவீங்கன்னு பார்த்தா..மேகி மோட்ல வந்துருக்கீங்க.. ரம்யாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா கிருஷ்ணனை கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் தொகுத்து வழங்கப் போகிறார் என இரண்டு நாட்களாக தகவல் பரவிய நிலையில் இன்று வெளியான புரமோக்களில் அது உறுதியானது.

நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸுடன் ஜாலியாக சிரித்தப்படி பேசிக்கொண்டிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

பஞ்ச தந்திரம் மேகி போல்

பஞ்ச தந்திரம் மேகி போல்

இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கமலை பார்த்த இடத்தில் ரம்யா கிருஷ்ணனை பார்க்க முடியவில்லை என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் படையப்பா நீலாம்பரி போல் இருப்பார் என்று பார்த்தால் பஞ்ச தந்திரம் மேகி போல் இருக்கிறாரே என்று குறிப்பிட்டு வருகின்றனர்

பிக்பாஸுக்கு கமல்

பிக்பாஸுக்கு கமல்

இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அந்த படையப்பா படத்துக்கு எப்படி கெத்து நீலாம்பரி. அதே மாதிரி பிக்பாஸுக்கு கெத்து கமல் சார்.. மிஸ் யூ கமல் சார்.. சீக்கிரம் நலமுடன் திரும்பி வாருங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

எப்படி கேட்க போறாங்க தெரியலையே..

எப்படி கேட்க போறாங்க தெரியலையே..

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா... இந்த மேடம் எப்படி தான் கேள்வி கேட்க போறாங்க தெரியலையே? பிக்பாஸ் ரசிகர்கள் ரியாக்ஷன் என பதிவிட்டுள்ளார்.

ஆர்வமாய் காத்திருக்கிறோம்

ஆர்வமாய் காத்திருக்கிறோம்

இன்றைய இரண்டாவது புரமோவில் ரம்யா கிருஷ்ணன் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அவர் நிகழ்ச்சியை பார்த்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி... ஊறுகாய் பாட்டீல் கூட விட்டு வைக்கல... ஆர்வமாய் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

மைதிலியோட சிஸ்டர் மேகி

மைதிலியோட சிஸ்டர் மேகி

இன்றைய இரண்டாவது புரமோவில் ரம்யா கிருஷ்ணன் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அட நண்பா... மேகிப்பா இது... நீங்க எல்லாரும் நீலாம்பரின்னு தான நினைச்சீங்க... ஆனா இல்ல... நம்ம மேகி... மைதிலியோட சிஸ்டர் மேகி... என கிணிட்லடித்துள்ளார்.

மற்றவர்கள் நிரப்புவது கஷ்டம்

மற்றவர்கள் நிரப்புவது கஷ்டம்

இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் வார இறுதி நிகழ்ச்சியை மற்றவர்கள் தொகுத்து வழங்குவதை பார்க்க கஷ்டமாக உள்ளது. கமல் சார் கிரியேட் செய்த பெஞ்ச் மார்க்கை மற்றவர்கள் நிரப்புவது கஷ்டம்... உங்களை மிஸ் பண்ணுகிறோம் சார்... விரைவில் நலம் பெறுங்கள் சார்... ஆல் த பெஸ்ட் ரம்யா கிருஷ்ணன் மேம்.. எனபதிவிட்டுள்ளார்.

நல்லா ரோஸ்ட் பண்ணுங்க..

நல்லா ரோஸ்ட் பண்ணுங்க..

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவதை பார்த்த இந்த நெட்டிசன், தெய்வமே ஒரு வாரம் இல்ல ரெண்டு வாரம் வருவீங்களோ தெரியல... ஆனால் பாரபட்சம் பார்க்காம எல்லோரையும் ரோஸ்ட் பண்ணிட்டு போங்க... இங்க சில ஆர்மிஸ் தொல்லை தாங்க முடியல.. என பதிவிட்டுள்ளார்.

வந்தேன் வந்தேன் மோட்ல

வந்தேன் வந்தேன் மோட்ல


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீலாம்பரி மோட்ல வருவீங்கன்னு பார்த்தா, வந்தேன் வந்தேன் மோட்ல வந்துட்டீங்களே என கிண்டலடித்துள்ளார்.

ரம்யாவை பார்க்க கஷ்டமாக..

ரம்யாவை பார்க்க கஷ்டமாக..

இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரை பார்த்த இடத்தில் ரம்யாவை பார்க்க கஷ்டமாக இருக்கிறது... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X