எதாவது புரிஞ்சுதா யாருக்காவது? பிக்பாஸ் புரமோவை பார்த்து கமலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கமல் பேசுவதை கலாய்த்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பேசிய கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்டடா என்பது குறித்து விளக்கம் கொடுத்தார்.
ஸ்க்ரிப்ட்டட் என்றால் போட்டியாளர்களே ஸ்க்ரிப்ட் எழுதி நடிக்கிறார்கள் என்று அர்த்தம் என்றார். மேலும் நிரூப் ஸ்க்ரிப்டை மாற்றும் வேலையைதான் செய்துள்ளார் என்றார்.

ஏதாவது புரிஞ்சுதா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் கமல் பேசுவதில் ஏதாவது புரிந்ததா? என்னதான் சொல்ல வருகிறார் என்று கேட்டு வருகின்றனர். மேலும் இதை ஒரு புரமோ என்று போட்டு என் கடுப்பேற்றுகிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏதாவது புரிஞ்சுதா யாருக்காவது?? என கேட்டுள்ளார்.

விளங்கின மாதிரிதான்
புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், கைப்பாவைக்கே நாலு பேர் நாலு தடவை definition கேப்பாங்க.... நீங்க பேசுறது சுத்தம் விளங்கினமாதிரிதான் என கிண்டலடித்துள்ளார்.

நேரடியாவே சொல்லலாம்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கிறுக்குத்தனமா எதும் பண்ணதடா நிரூப்ன்னு டைக்ரக்டாவே சொல்லலாம்.. ஆண்டவரே புரியாத மாதிரி பேசிட்டு இருக்கீங்க.. என்று கூறியுள்ளார்.

பெயர்களை கெடாமல்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஸ்க்ரிப்ட்டட் ஷோ இல்ல சிலவற்றை மறைச்சு, சிலர் செயல்களை மறைச்சி சிலர் டபுள் ஸ்டாண்டர்டுஸை மறையுது எடிட் செஞ்சு சில பேரின் பெயர்களை கெடாமல் பார்த்துக்கொண்டு பார்வையாளர்கைளை மானிப்புலேட் செய்ற ஸ்க்ரிப்ட் தானே என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நம்புறமாதிரியா இருக்கு
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல் சார் பேசுறதை பார்த்தால் இந்த காமெடி காட்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது என கலகலப்பு படத்தில் சந்தானத்திடம் விமல் இதுலாம் நம்புறமாதிரியா இருக்கு என கேட்டு பதிவிட்டுள்ளார்.

நல்லா நடத்துங்க...
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதை கடைசி சீசன் பாலாஜி முருகதாஸ் இதைவிட பெட்டரா பண்ண அப்போ, ரூல்ஸ் அது இதுன்னு கதை விடுறது... இப்போ என்னடான்ன ஸ்க்ரிப்ட்ட மாத்தி எழுதுறாராம்.. நல்லா நடத்துங்க என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











