twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பவே பொங்க வேண்டியதுதானே.. சண்டை முடிந்ததும் கட்டிப்பிடிப்பீங்க... பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் நிரூப்பையும் பிரியங்காவையும் பங்கம் செய்துள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் நிரூப், பிரியங்கா மற்றும் அபிஷேக் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. வேண்டாம் என்று சொல்லியும் ஏன் கலாய்த்தீர்கள் என பிரியங்காவிடம் ஆவேசமாக கத்துகிறார் நிரூப்.

    அப்போது குறுக்கிடும் அபிஷேக், உன்னை நான் கலாய்த்ததில் உனக்கேதும் பிரச்சனை என்றால் என்னிடம் கேள். எதற்கு பிரியங்காவிடம் கத்துகிறாய் என்று நிரூப்பிடம் ஏறுகிறார். அதுவரை அமைதியாக இருந்த பிரியங்கா அபிஷேக் பேச ஆரம்பிரத்ததும் நிரூப்பிடம் எகிறுகிறார்.

    ஹேப்பி நியூஸ்... இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது அவர்தானாம்! ஹேப்பி நியூஸ்... இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது அவர்தானாம்!

    முத்தத்தை வெறுக்க வைத்தவர்

    முத்தத்தை வெறுக்க வைத்தவர்

    ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை பிளே பண்ணுங்க பிக்பாஸ், நான் வெளியே போகிறேன் என கும்பிடு போடுகிறார் பிரியங்கா. இதனை பார்த்த நெட்டிசன்கள், பிரியங்காவையும் நிரூப்பையும் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் இந்த சண்டை முடிந்ததும் பிரியங்கா எழுந்து hug செய்வார். ஒருவரிடம் பாசமாக இருப்பதை காட்டும் கட்டிப்பிடிப்பதையும் முத்தம் கொடுப்பதையும் வாழ்நாள் முழுக்க வெறுக்க வைத்தவர் பிரியங்கா
    அதில் கூட தேர்ந்த நாடகத் தனம்.. உங்களுக்கு வெளியே இல்லாத புகழ் இங்கே கிடைத்து விட போவதில்லை.. பிறகு எதற்கு இந்த கேவல நாடக காட்சிகள் என விளாசியுள்ளார்.

    வாய் கிழிய சண்டை போட்டு

    வாய் கிழிய சண்டை போட்டு

    இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாய் கிழிய சண்டை போட்டுட்டு,வந்து முத்தம் கொடுக்குறது கட்டி பிடிக்கிறது, ஏன்னு கேட்டா சமையல் நல்லா இருந்துச்சுனு சொல்றது.. ஆக, பிரியங்காவை பொறுத்தவரை தாமரை சமைக்கவும், வீடு சுத்தம் பண்ணவும்,கை கால் அமுக்கவும், பொத்திகிட்டு ஓரமா இருக்கவும் தான் லாயக்கு.. தலைவர் ஆக எல்லாம் தகுதியே இல்லல்ல? என கேட்டு விளாசியிருக்கிறார்.

    நிரூப்பை வெளியே அனுப்பதான்

    நிரூப்பை வெளியே அனுப்பதான்

    இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த சுவாரஸ்ய சைக்கோ உள்ளே வந்ததே நிரூப்பை வெளியே அனுப்பத்தான். இதுல நிரூப் வேற ராஜூவையும் பிரியங்காவையும் தான் புடிக்கும்னு சொன்னது இவனுக்கு பொறுக்கல. ஏண்டா இப்படி எல்லாம் பண்றனு அபிஷேக்கிட்ட கேட்டா.. சுவாரஸ்யம் புரோ.. அதுக்காக நா என்னையயே எரிச்சிப்பேன்னு உருட்டுவான்.. என அபிஷேக்கை சாடியுள்ளார்.

    பித்தலாட்டத்தின் முழு உருவங்கள்..

    பித்தலாட்டத்தின் முழு உருவங்கள்..

    இன்றைய புரமோவில் நிரூப்பும் பிரியங்காவும் சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், தாமரையை சீண்டுனா ஊரே பொங்கும்.. உங்க 5 பைசா சண்டை புரமோக்குன்னு எங்களுக்கு தெரியும்
    கிளம்புங்க கிளம்புங்க.. பித்தலாட்டத்தின் முழு உருவங்கள் என வாரியுள்ளார்.

    டெய்லி லாம் பல்ப் வாங்க முடியாது

    டெய்லி லாம் பல்ப் வாங்க முடியாது

    இன்றைய புரமோவில் நிரூப் கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன்
    இவ்ளோ பொங்குற தம்பி டாஸ்க் முன்னாடியே தடுக்க வேண்டியது தானே. இல்ல நிஜமாவே பிரியங்கா, அபிஷேக் அரசியல எக்ஸ்போஸ் பண்றானானு எபிசோட்ல பாப்போம்... டெய்லிலாம் பல்ப் வாங்க... நாங்க எலக்ட்ரீஷியன் இல்ல என பதிவிட்டுள்ளார்.

    இந்த சீசன் போட்டியாளர்கள்

    இந்த சீசன் போட்டியாளர்கள்

    இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த சீசன் போட்டியாளர்களையும் போன சீசன் போட்டியாளர்களையும் ஒப்பிட்டு பார்த்த போன சீசன்....... பாலாஜி!!!!
    இந்த சீசன்........நிரூப்........
    போன சீசன்....... அர்ச்சனா....
    இந்த சீசன்...... பிரியங்கா!!! என பங்கம் பண்ணியுள்ளார்.

    பழி தீர்க்கும் படலம்

    பழி தீர்க்கும் படலம்

    இன்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா மொத்தமா விசக்கிருமியா மாறி நிற்குது. தன்னை கேள்வி கேட்டால், எதிர்த்து பேசினால் அதை மனதில் வைத்து எந்த எல்லைக்கும், யுக்தியையும் பயன்படுத்தி அக்கிருமி தாக்கும். தன் பழி தீர்க்கும் படலத்திற்கு ஊறுகாயாக அபிஷேக், சஞ்சீவ் போன்ற அல்லகைகளை யூஸ் செய்யும் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Biggboss Tamil 5: Netizens making fun of Priyanka and Niroop. Niroop and Priyanka fights in Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X