சந்திரமுகியாக மாறி அசத்தல் பர்ஃபார்மன்ஸ்... அப்ளாஸை அள்ளிய இசைவாணி... வேற லெவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் இசைவாணியின் சந்திரமுகி பர்ஃபாமன்ஸை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக சினிமா சினிமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் ஒரு சினிமா கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிரூப்புக்கு அம்பி, அந்நியன் என இரண்டு கேரக்டர், நேசமணியாக பிரியங்கா, கஜினி சூர்யாவாக பாவனி, கரகாட்டகாரன் கனகாவாக தாமரை, படையப்பாவாக சிபி, சந்திரமுகியாக இசைவாணி, எந்திரனாக வருண் என ஒவ்வொருவருக்கும் ஒரு கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

முந்தி முந்தி விநாயகனே
அந்தந்த கேரக்டர்களுக்கான பாடல் ஒளிபரப்பப்படும் போது அவரவர் வந்து லிவிங் ஏரியா மீது அமைக்கப்பட்டுள்ள ஸ்டேஜில் நடனமாட வேண்டும். நேற்றைய எபிசோடில் முதல் பர்ஃபாமன்ஸாக தாமரை செல்வி முந்தி முந்தி விநாயகனே பாடலுக்கு நடனமாடினார். அவரது நடனத்தை பார்வையாளர்கள் மட்டுமின்றி ஹவுஸ்மேட்டுகளும் ஆவென வாயை பிளந்துகொண்டு பார்த்தனர்.

சந்திரமுகியாக மாறிய இசைவாணி
இதேபோல் இசைவாணிக்கு சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற ரா ரா பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதில் சந்திரமுகியாகவே மாறி அசத்தல் பர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தினார் இசைவாணி. ஒவ்வொரு ஸ்டெப்புமே படத்தில் இடம்பெற்றதை போல் அற்புதமாக ஆடினார் இசைவாணி. இசைவாணியின் நடனத்தை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் அவரது பர்ஃபாமன்ஸை பாராட்டி வருகின்றனர்.

நிரூபித்துவிட்டார் இசைவாணி
அந்த வகையில் இந்த நெட்டிசன், நேற்றைய எபிசோடில் இசைவாணியின் பர்ஃபாமன்ஸ் எதிர்பார்த்தப்படி நன்றாக இருந்தது. வரும் டாஸ்க்குகளில் சிறப்பாக செய்வேன் என்று கூறியிருந்தார். அதேபோல் செய்து நிரூபித்துவிட்டார்.. நீ செல் பெண்ணே என பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சியாக இருந்தது
நேற்றைய எபிசோடில் இசைவாணியின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், இசைவாணி சிறப்பாக நடனமாடினார். அவருடைய நடனம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.

கவனத்தை ஈர்க்க முடியும்
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், இசைவாணி, பிரியங்கா, சிபி மற்றும் தாமரை ஆகியோர் நன்றாக செய்தார்கள். ஏனென்றால் உரையாடல்களை விட மேனரிசம் மற்றும் நடைகள் மற்றும் நடனங்கள் மூலம் கவனத்தை மிகவும் எளிதாக ஈர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தாறுமாறு தக்காளி சோறு
நேற்றைய எபிசோடில் இசைவாணியின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், இசைவாணி தாறுமாறு தக்காளி சோறு... அமுக்கு டுமுக்கு.. அமால் டூமில் என பதிவிட்டுள்ளார்.

காணக் கண்கோடி வேண்டும்..
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், தாமரைச் செல்வியின் நடனம் பரவசப்படுத்தியது. பிரியங்காவே வாய் பிளந்து ரசிக்கும் அளவுக்கு அசல் சந்திரமுகியாகவே மாறிய இசைவானியின் நடனம் பார்க்க காணக் கண்கோடி வேண்டும்.. என புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

இசைவாணியின் பர்ஃபாமன்ஸ்
நேற்றைய எபிசோடில் இசைவாணியின் சந்திரமுகி டான்ஸை பார்த்த இந்த நெட்டிசன், இசைவாணி இன்று சூப்பர் பர்ஃபாமன்ஸ்... என பதிவிட்டுள்ளார்.

பிரமிப்புடன் பார்த்தார்
மற்றொரு நெட்டிசனான இவர், இசைவாணியின் பர்ஃபாமன்ஸ் சிறப்பாக இருந்தது என பதிவிட்டுள்ளார். காலை குலுக்கியது உட்பட எல்லாமே சிறப்பாக இருந்தது... பிரியங்கா அவருடைய பர்ஃபாமன்ஸை பிரமிப்புடன் பார்த்தார் என பதிவிட்டுள்ளார்.

தைரியமாக நடனமாடினார்
மற்றொரு நெட்டிசனான இவர் இசைவாணி, கிளாசிக்கல் டான்ஸராக இல்லாவிட்டாலும் அவர் முயற்சி செய்தார். அவர் தைரியமாக நடனமாடினார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











