பிரியங்கா முகம் இல்லாமல் 2 புரமோ.. என்ன தைரியம் எடிட்டருக்கு.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் புளூ டிவி அணியினர் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
அதன்படி ராஜுவும் இமான் அண்ணாச்சியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இதில் ராஜு எப்போதும் போல காமெடியாக தனது தொகுத்து வழங்குகிறார்.

காமெடியாக இருக்கும்..
இருவரும் காமெடியாகவே நிரூப்பை வச்சு செய்கின்றனர். இதனால் நேற்றைய எபிசோடை காட்டிலும் இன்றைய எபிசோட் காமெடியாக இருக்கும் என தெரிகிறது. இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அழகிய நெல்லை தமிழ்
அந்த வகையில் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு ஒரு விதத்தில் இமான் அண்ணாச்சியை பிடிக்கும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்த போதும் இன்னமும் நெல்லை ஸ்லாங்கை பர்ஃபெக்ட்டாக மெய்ன்டைன் செய்கிறார். அழகிய நெல்லைத் தமிழில் பேசினால் தான் அண்ணாச்சி, அது சிலருக்கு கோபமாக தெரியலாம். அவரவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி
அண்ணாச்சி பட பட என்று பேசுவது தான் நெல்லை தமிழின் அழகு என குறிப்பிட்டுள்ளார்.

காமெடிதான் பெஸ்ட்..
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு அப்ப வச்சு செய்யப்போறாரு ராஜு... எதுக்கு அவங்கள பேசிவிட்டு பாதியில் நிப்பாட்டி மெஸேஜ் சொல்லனும் அசிங்கமா
அந்த அரசியலை விட.. காமெடிதான் பெஸ்ட் என பதிவிட்டுள்ளார்.

சண்டையே முடியல...
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஊசி குத்தும் ஆனா வலிக்குதுனு கத்த முடியாது... இந்த சீசனை விஷமில்லாமல் மாற்றியதற்கு நன்றி ராஜு... இவங்க தாமரைக்கிட்ட போடுற சண்டையே முடியல... என பதிவிட்டுள்ளார்.

காலி பண்ணிட்டு இருக்கீங்க..
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்க டீம் மாதிரி வெஞ்சன்ஸோடவும் சண்டை போடணும்னு நினைச்சா எதிர் அணிக்கு தான் செயல்படுவான்.. நிரூப் அவனும் உங்க கிட்ட இருந்து விலகணும் விலகணும்னு பார்த்தாலும் செருப்புல ஓட்டுன சாணி மாதிரியே அபிஷேக்கும் பிரியங்காவும் அவன் கூட இருந்தே அவனை காலி பண்ணிட்டு இருக்கீங்கடா.. என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா முகம் இல்லாமல்..
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா முகம் இல்லாமல் இரண்டு புரமோ என்ன தைரியம் எடிட்டருக்கு.... வாழ்க நீ எம்மான்.... என பங்கமாய் கலாய்த்துள்ளார்.

கடுப்பேத்தும் நபர் பிரியங்கா
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த சீசனில் கொஞ்சமாவது சிரிப்பு காட்டும் ஒரே நபர் இந்த ராஜு தான். காமெடின்னு கடுப்பேத்தும் நபர் நம்ம பிரியங்கா. ஆனா இந்த நிரூப் பாவம் அர்ச்சனா கூட சேர்ந்து வீணா போன நிஷா மாதிரி பிரியங்கா கூட சேர்ந்து இப்போ survive ஆக தடுமாறிட்டு இருக்கார். இன்னும் கூட மாற வாய்ப்பு இருக்கு... என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











