இது எவ்ளோ பெரிய வாய்ப்பு? ஆனா உள்ள போய் நீ என்ன பண்ணிட்டிருக்க? அமீரை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அமீரை விளாசி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Amir அம்மாவிற்கு நடந்த கொடூரம் அதிர்ச்சி தகவல் | Pavani, Prabhudeva

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்களுக்கு பிறகு வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்தவர் டான்ஸ் மாஸ்டர் அமீர். வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்ததால் அவருடைய கடந்த கால வாழ்க்கையை பார்வையாளர்களுடனும் சக ஹவுஸ் மேட்டுகளுடனும் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில் பிக்பாஸ் வைல்டு கார்ட் போட்டியாளர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் வகையில் கடந்து வந்த பாதை டாஸ்க்கை கொடுத்துள்ளார் என்பது இன்றைய மூன்றாவது புரமோவில் தெரியவந்தது.

கண்ணீர் விட்ட அமீர்

கண்ணீர் விட்ட அமீர்

இதில் பேசும் அமீர் தான் தனது அப்பாவை பார்த்ததே இல்லை என்றும், இவ்ளோ பெரிய சேனலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிற்கும் தன்னை பார்க்க தன் தாயும் இல்லை என்றும் கூறி கண்ணீர் விடுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இவ்ளோ பெரிய சேனலில் எவ்ளோ பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆனால் நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல், நீங்கள் எப்போதும் பாவனி பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என விளாசி வருகின்றனர்.

நீ என்ன பண்ணிட்டிருக்க?

நீ என்ன பண்ணிட்டிருக்க?

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவ்ளோ பெரிய சேனல், தமிழ் நாட்டுல இவ்ளோ பெரிய ஷோ... உன்னைவிட தகுதியுள்ளவன் பலபேர் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே இருந்து ஏக்கத்தோடு வேடிக்கை பார்க்கிறாங்க.. ஆனா இதுல நீ நின்னுட்டிருக்க... இது எவ்ளோ பெரிய வாய்ப்பு? ஆனா உள்ள போய் நீ என்ன பண்ணிட்டிருக்க? என்று சாடியுள்ளார்.

லைஃப்ல ஜெயிக்கணும்..

லைஃப்ல ஜெயிக்கணும்..

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அமீர் நீங்க ஃபைனல் வரனும் லைஃப்ல ஜெயிக்கனும் நாங்க எல்லாம் உங்க கூட இருக்குறோம்!தாய் தந்தை இல்லாது வாழும் வலி புரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என பதிவிட்டுள்ளார்.

நிச்சயம் வெற்றி பெறுவாய்

நிச்சயம் வெற்றி பெறுவாய்

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி பின்னால் அலையாமல் நீ உன்னுடைய விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவாய் என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா விடும் கண்ணீர்

பிரியங்கா விடும் கண்ணீர்

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,

யம்மா.... அமீர் கதையை விட... பிரியங்கா... நீ விடற முதலை கண்ணீர்..
வேற லெவல்.. என பிரியங்கா அழுவது குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

நிறைய இழந்திருக்கீங்க..

நிறைய இழந்திருக்கீங்க..

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அமீர் நீங்க எல்லா கேப்டன்ஸி டாஸ்க்கும் விட்டுக்கொடுக்கும் போதே தெரிந்தது, நீங்க வாழ்க்கையில் நிறைய இழந்திருக்கீங்கனு.. என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X