தெளிவாதான் பேசுறீங்க ராஜு பாய்.. ஆனா கண்டென்ட்டா ஆக்கிருவாங்களே.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் பேசிய ராஜு கலைஞர்கள் தங்களின் கஷ்டத்தை வெளியில் காட்டக் கூடாது என்றார். பிக்பாஸ் கொடுத்த கடந்து வந்தப் பாதை டாஸ்க்கின் தொடர்ச்சியாக இது இருந்தது.
அந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் கண்ணீர் விட்டதற்கு பதிலடியாக ராஜு இப்படி பேசியதாக தெரிகிறது. ராஜுவின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும் இந்த டாஸ்க்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நிஜ வாழ்க்கையில் கொடுக்க முடியும்?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சொந்த கதை சோக கதைக்கு எப்படி ரேட்டிங் கொடுக்கிறீங்க?
உங்க வலிக்கு இன்னொருத்தர் நிஜ வாழ்க்கையில கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார்.

நெருப்பு இருக்குய்யா..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பையன் பின்றான்லே!.. ஏதோ ஒரு நெருப்பு அவன்கிட்ட இருக்குயா! என ஒரு மீமை ஷேர் செய்து ராஜுவை பாராட்டியுள்ளார்.

நாங்க கொடுக்றது ஒன்னே ஒன்னுதான்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய் இந்த டாஸ்க் வச்சி Thumbs up Thumbs down Red heart இந்த எமோஜி எல்லாம் எப்படிடா கொடுக்குறீங்க? ஓகே இதுல சில பேரோட சுயரூபம் தெரிய வரும். ராஜு என்னமோ சொல்றாரு சொல்லுறான் எபிசோட் பாத்துட்டு பேசிக்கலாம்.
ஆனா இந்த டாஸ்க்கு நாங்க கொடுக்குறது ஒன்னே ஒன்னு தான்.. என தம்ப்ஸ் டவுன் செய்துள்ளார்.
Recommended Video

எபிசோடை பார்ப்போம்
புரமோவில் ராஜு பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், எக்ஸாட்லி.. ஆனா புரமோவ நம்பி ஒரு முடிவுக்கும் வர முடியாது...எபிசோடை பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

எபிசோட் பூனை
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரமோ புலி.. எபிசோட் பூனை என விமர்சித்துள்ளார். புரமோ பார்த்து ஒரு முடிவுக்கும் வர முடியாது.. காத்திருக்கலாம்.. இன்றைய எபிசோட் புலி மாதிரி இருக்கா அல்லது பூனை மாதிரி இருக்கா என்று என குறிப்பிட்டுள்ளார்.

சண்ட ஆரம்பிச்சிடும்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதை சாக்கா வச்சிட்டு அந்தம்மா ஒன்னு சொல்லும் பதிலுக்கு இவன் ஒன்னு சொல்லுவான். அவ்ளோதான் சண்ட ஆரம்பிச்சிடும்... இதுல ஆளுக்கொரு டீம்மா பிரிஞ்சிக்கிறது என்னமோ வேற வேற நாட்டுக்காறாங்க மாதிரி... மறுபடியும் சேர்த்து வைக்க பஞ்சாயத்து வேற நடக்கும்.. என குறிப்பிட்டுள்ளார்.

கண்டென்ட்டா மாத்திருவாங்களே
இரண்டாவது புரமோவில் நடிகர் ராஜு பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், தெளிவா தான் பேசுறீங்க ராஜூ பாய் ஆனா இதை கண்டென்ட்டா மாத்திருவாங்களே.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











