அப்போ எங்க ஓட்டு? வனிதா விஜயகுமார் வந்தப்போ எப்டி இருந்ததோ அப்டிதான் இருக்கு.. சீறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா ரீஎன்ட்ரி கொடுத்ததை பார்த்த நெட்டிசன்கள் எங்கள் ஓட்டுக்கு என்ன மதிப்பு என கேட்டு வருகின்றனர்.
யூட்யூப் விமர்சகரான அபிஷேக் ராஜா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றார். வீட்டுக்குள் சென்றதுமோ மற்ற போட்டியாளர்களை இன்ஃபுளுயன்ஸ் செய்ய தொடங்கினார்.
யாரையுமே அவர்கள் இஷ்டத்திற்கு விளையாட விடாமல் தனது கருத்துக்களையும் ஸ்டைலையும் திணித்து வந்தார். சம்பந்தமே இல்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்தார்.

வைரலான விமர்சன வீடியோக்கள்..
அதேபோல் சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி என சக போட்டியாளர்களின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசி வந்தார் அபிஷேக் ராஜா. அதோடு கடந்த பிக்பாஸ் சீசன்கள் குறித்தும் கமல்ஹாசன் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து அவர் வெளியிட்ட வீடியோக்களும் வைரலானது.

ஏற்கனவே கசிந்த தகவல்
போதா குறைக்கு நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என மாற்றி மாற்றி பேசி மாட்டிக் கொண்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார் அபிஷேக் ராஜா. இதனை தொடர்ந்து அபிஷேக் ராஜா, வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வருவார் என கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது.

முகத்தில் ஈயாயடவில்லை..
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க்கின் போது பெட்டிக்குள் இருந்து வெளியே வந்தார் அபிஷேக் ராஜா. இதனை பார்த்து சில ஹவுஸ்மேட்ஸ் ஹேப்பியாயினர். சிலர் முகத்தில் ஈயாடவில்லை. இந்நிலையில் அபிஷேக் ராஜாவின் ரீஎன்ட்ரிக்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

அவர் போல் யாராவது வருவாங்களா?
அபிஷேக் ராஜா என்ட்ரியை பார்த்த இந்த நெட்டிசன், வனிதா பிக்பாஸ் சீசன் 3யில் ரீ என்ட்ரி கொடுத்தப்போது எப்படி இருந்ததோ அப்படிதான் உள்ளது. அந்த விரக்தியை என் மனதில் இருந்து விரட்டியது மீரா மிதுன்தான். இந்த சீசனில் அந்த மாதிரி யாராவது வருவாங்களா என கேட்டுள்ளார்.

நேருக்கு நேராக பேசுபவர்
மற்றொரு நெட்டிசனான இவர் அபிஷேக் ராஜாவின் வருகையால் ஹேப்பியாகியுள்ளார். அபிஷேக் ராஜா மீண்டும் வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர். மக்கள் நினைப்பது போல் அவர் அவ்வளவு மோசமானவர் அல்ல, அவர் எப்போதும் நேருக்கு நேராக பேசுபவர். ராஜு போன்று போலியாக இல்லை. அபிஷேக்கிற்கு சிறப்பான கேரியர் அமையும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

எங்க ஓட்டுக்கு என்ன மதிப்பு?
அபிஷேக் ராஜாவின் ரீஎன்ட்ரியை பார்த்த இந்த நெட்டிசன், நம்ம வேலை மெனக்கட்டு ஓட்டு போட்டு வெளியே அனுப்புவோமாம்... இவங்க நோகாம திரும்பவும் உள்ளே அனுப்புவாங்களாம்... என பதிவிட்டுள்ளார்.

உண்மையான முகம் காட்டுவாரா?
அபிஷேக் ராஜாவின் ரீஎன்ட்ரியை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக் ராஜாவிடன் பிரியங்கா மீண்டும் தனது உண்மையான முகத்தை காட்டுவதை பார்க்க முடியுமா என பதிவிட்டுள்ளார்.

அபிஷேக்குடன் சேர்ந்தால்
பிக்பாஸ் வீட்டுக்குள் அபிஷேக் ராஜாவின் ரீஎன்ட்ரியை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி ரெட்டி அபிஷேக் ராஜாவுடன் இருந்தால் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிடும் என எச்சரித்து பதிவிட்டுள்ளார்.

எப்படி தெரியும்? ஜோசியமா?
அபிஷேக் ராஜாவின் ரீ என்ட்ரியை பார்த்ததும், நீ பாக்ஸ்க்குள் இருந்து வருவாய் என எனக்கு தெரியும் என பாவனி கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், பாவனிக்கு எப்படி அது தெரியும்? ஜோஸியமா என கேட்டுள்ளார்.
Recommended Video

ஆட்டம் இனிமேதான் ஆரம்பம்
அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததை பார்த்த இந்த நெட்டிசன், முறையான குவாரண்டைன் இல்லாமல் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஆக ஆட்டம் இனிமேதான் ஆரம்பம் ஆகப்போகுது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











