சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா... அண்ணாச்சி சொன்னது சரிதான்... நிரூப்பை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதில் கேப்டனாக அண்ணாச்சி வெற்றி பெறுகிறார்.
ஆனால் நிரூப் தன்னிடம் உள்ள காயினை வைத்து அவரது கேப்டன் பதவியை தட்டிப்பறிக்கிறார். இதனால் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக முதல் முறையாக வெற்றி பெற்ற அண்ணாச்சி ஏமாற்றமடைந்துள்ளார்.

மரண பயத்த காட்டிட்டாங்க பரமா
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள், நிரூப் நேற்றைய எபிசோடில் எவிக்ஷன் புராசஸில் கடைசி வரை வந்ததே அண்ணாச்சியின் கேப்டன் பதவியை தட்டிப்பறித்ததற்கான காரணம் என்று கூறி வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் நேத்துல இருந்து... நிரூப் மைண்ட் வாய்ஸ்.....
இதான்... நேற்று எவிக்ஷனில் கடைசி வரை கொண்டு சென்று மரண பயத்தை காட்டியதுதான். அதனால் தான்... தனது காயினை பயன்படுத்தி உள்ளான்... என்று பதிவிட்டுள்ளார்.

நம்பிக்கை போச்சா?
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன நிரூப்பு... மக்கள் மேல இருந்த நம்பிக்கை போச்சா? உன்னோட ஆட்டது மேல நம்பிக்கை போச்சா?தம்மா துண்டு காயின்ல தான் இனி ஃபைனல் வரைக்கும் வரணும் னு தெரிஞ்சி போச்சா? அண்ணாச்சி டயலாக் : உன்னோட கண்ல அந்த பயத்தை பாத்துட்டேன். அதை இந்த வாரத்துல மெதுவா வெளியே கொண்டு வர்றேன் என்று பதிவிட்டுள்ளார்.

நிரூப் வாங்கிட்டாரு..
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவருக்கு தகுதியிருக்கும் போல.. வீட்டு வேலையிலேந்து எஸ்கேப் ஆகுற ஆளுக்கு நிறைய தகுதிப்போல.. நல்ல வேலை நிரூப் வாங்கிட்டாரு.. அண்ணாச்சிக்கு ஓட்டு போடாதீங்க என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நிரூப் பயந்துட்டாப்ல..
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன். அண்ணாச்சி நிரூப் பயந்துட்டாப்ல... நீங்க பயப்பிடல விட்டுக்கொடுங்க என பதிவிட்டுள்ளார்.

அடிச்சு ஆடியே ஆகனும்
இன்றைய புரமோவில் அண்ணாச்சியின் கேப்டன் பதவியை நிரூப் தட்டிப் பறித்ததை பார்த்த இந்த நெட்டிசன், செம.. இதுதான் சரியான விளையாட்டு நிரூப்... எதை எப்ப பண்ணணுமுமோ அப்ப அடிச்சு ஆடியே ஆகனும் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











