அக்கா என்னத்த சொல்லி மாட்டிக்கிச்சோ தெரியலையே? பிக்பாஸ் புரமோவை பார்த்து பதறும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பதறியுள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய இரண்டாவது புரமோவில் நமீதா மாரிமுத்துவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே பிரச்சனை என தெரிகிறது.
தாமரை செல்வி மன்னிப்பு கேட்டப் பிறகும் கடும் கோபத்துடன் பிக்பாஸ் வீட்டில் வலம் வருகிறார் நமீதா மாரிமுத்து.

ரசிகர்கள் கவலை
திருநங்கையான நமீதா மாரிமுத்துவுக்கும் தாமரை செல்விக்கும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு மோதல் வரை சென்றிருப்பது ரசிகர்களை கவலையடைச் செய்துள்ளது. என்ன நடந்ததோ தெரியவில்லையே என பதறியுள்ளனர் நெட்டிசன்சகள்.

என்னத்த சொல்லி மாட்டிக்கிச்சோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அக்கா என்னத்த சொல்லி மாட்டிக்கிச்சோ தெரரியலையே? மன்னிப்பு வேற கேட்டிருக்காங்க.. என பதிவிட்டுள்ளார்.

ஆட்டத்தில் இதெல்லாம் சகஜம்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வெள்ளந்தியா ஏதாவது சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆட்டத்தில் இதெல்லாம் சகஜம்... என பதிவிட்டுள்ளார்.

பெரிய சம்பவம் நடக்கபோகுதோ?
புரமோவில் நமீதா மாரிமுத்து கோபத்துடன் வலம் வருவதை பார்த்த இந்த நெட்டிசன், ஏதாவது பெரிய சம்பவம் நடக்கபோகுதோ? என பதறியுள்ளார்.

எபிசோடுல போடுவீங்களா பாசு?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவனுங்க சும்மா எடிட் பண்ணி போட்டாலே ஒன்னும் புரியாது. இதுல நைட் காலைலனு எடிட்டிங் பண்ணி போடுறானுங்க. ஆனா இந்த சண்டை கண்டிப்பா மொக்கையா தான் போகும். ஏன்னா தாமரை செல்வி அக்கா டக்குனு மன்னிப்பு கேட்டுருறாங்க.
அது சரி இதை இன்னைக்கு எபிசோடுல போடுவீங்களா பாசு என கேட்டு கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

புடிச்ச போட்டியாளர்கள்
நமீதா மாரிமுத்துவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை, நமீதா ரெண்டு பேருமே நமக்கு ரொம்ப புடிச்ச போட்டியாளர்கள்.. என குறிப்பிட்டுள்ளார்.

அன்பாக இருக்க தெரியவில்லை
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நமீதா மிகவும் முரட்டுத்தனமாகவும் மற்றும் பாஸி போல் உள்ளார். அவருடைய கதை மிகவும் வருத்தமாக இருந்தது! ஆனால் அவர் மற்றவர்களிடம் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். தாமரை மிகவும் இனிமையானவராக இருக்கிறார்.

மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வரணும்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுலயா மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வரணும்.. என கேட்டு பதிவிட்டுள்ளார்.

எபிசோட் வரமாட்டேங்குது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு.... ஆனால் இது எல்லாம் எபிசோட்ல வரமாட்டேங்குது... என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











