அடுத்த அர்ச்சனாவாக மாறுகிறாரா ப்ரியாங்கா... புரமோவை பார்த்து காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், பிரியங்கா அடுத்த அர்ச்சனாவாக மாறுகிறார் என விமர்சித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பிரியங்கா இமான் அண்ணாச்சியை டார்கெட் செய்து பேசியது தெரியவந்தது.
கடந்த சில நாட்களாக அண்ணாச்சிக்கும் பிரியங்காவுக்கும் இடையே டெர்ம்ஸ் எதுவும் சரியில்லாமல் நான் சிங்காக உள்ளது.

பிரியங்காவின் மைண்ட் வாய்ஸ்
இந்நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா அடுத்த அர்ச்சனாவாக மாறி வருகிறார் என்றும் இப்படியே போனால் தனியாக அமர்ந்து அழ வேண்டியதுதான் என கூறி வருகின்றனர். இரண்டாவது புரமோவில் அண்ணாச்சி பிரியங்காவின் பவுலில் ஊற்றுவதை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்காவின் மைண்ட் வாய்ஸ் என அதை முதல்லையே வந்து ஊத்த வேண்டியது தானே.. இவ்ளோ விளக்கவுரை கேட்டு அததான் பண்ண போறீங்க என அண்ணாச்சியை சொல்வதாக பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா வெர்சஸ் அண்ணாச்சி
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
அனேகமாக இந்த வாரம் பிரியங்கா வெர்சஸ் அண்ணாச்சிக்கு இருக்கும் இந்த வாரம்... அண்ணாச்சிக்கு புரியல, எப்படித்தான் நாமினேட் பண்ணினாலும் அண்ணாச்சி எவிக்ட் ஆன பிறகுதான் பிரியங்கா போவார் என்று என பதிவிட்டுள்ளார்.

அடுத்த அர்ச்சனாவாக மாறுகிறார்
இன்றைய இரண்டாவது புரமோவில் பிரியங்கா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்த அர்ச்சனாவாக மாறுகிறாரா ப்ரியாங்கா...இன்றிரவு 10 மணிக்கு.. உங்கள் விஜய் டிவியில்.... என கிண்டலடித்துள்ளார்.

நிரூப்பின் விளையாட்டை ரசிக்கிறார்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணாச்சி எப்போதும் நடுநிலையாக தான் விளையாடுகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. நிரூப்பின் விளையாட்டை ரசிக்கிறார் என்பதுதான் உண்மை... என பதிவிட்டுள்ளார்.

ஆட்டியூட்டுக்கு அடி பணிய மாட்டார்
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணாச்சி பண்ற எல்லா செயலும் நேர்மையாக இருக்கு... அன்புக்கும் அடக்கத்துக்கும் அடி பணியும் அண்ணாச்சி... ஆட்டியூட்டுக்கு அடி பணிய மாட்டார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











