பாவனியோட மனநிலை இப்போ எப்படி தெரியுமா இருக்கு? பிக்பாஸ் புரமோவை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான புரமோக்களில் அக்ஷரா ரெட்டி பிக்பாஸ் வீட்டில் கோபமாக இருப்பது காட்டப்பட்டது.
இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் கோபமாக உள்ள அக்ஷராவிடம் ரொம்பவே அமைதியாக பேசுகிறார் சிபி. ஆனால் உங்களிடம் பேச எனக்கு விருப்பமில்லை என தடாலடியாக கூறி முகத்தை காட்டுகிறார் அக்ஷரா.

பொறுமைக்கு பாராட்டு
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிபியின் பொறுமையை பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் நேற்று பிரியங்கா போட்ட ஆட்டத்தை பார்த்து இன்று அக்ஷரா அதையே ஃபாலோ செய்கிறார் என்று கூறி வருகின்றனர். சில நெட்டிசன்கள், இவர்களின் சேட்டையை பார்த்துவிட்டு நாளை பாவனி தனது வேலையை காட்டப்போகிறார் என்று கூறி வருகின்றனர்.

அக்ஷரா டாஸ்க்குன்னு வந்தா..
இன்றைய எபிசோடுக்கான புரமோக்களை பார்த்த இந்த நெட்டிசன் அக்ஷரா டாஸ்க்குன்னு வந்தா, கத்துறாங்க அழுகுறாங்க, அப்புறம் அமைதியா இருக்காங்க... ரிப்பீட்டு... என்று மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யா பேசுவது போன்று பதிவிட்டுள்ளார்.

இது பெரும் ஆபத்து..
இன்றைய புரமோக்களை பார்த்த இந்த நெட்டிசன், அக்ஷரா கோபத்தில் தன்னையே இழந்து விடுகிறார்... இது பெரும் ஆபத்து என பதிவிட்டுள்ளார்.

இன்னைக்கு அக்ஷரா..
இன்றைய புரமோக்களில் அக்ஷராவின் ஆட்டம் அதிகமாக இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், நேத்திக்கு பிரியங்கா இன்னைக்கு அக்ஷரா.. எதுக்கு இப்படி ரொம்ப ஆடிட்டு இருக்காங்கன்னு தெரியல என்று கூறியுள்ளார்.

புரிய வைக்க முயற்சி..
இன்றைய புரமோக்களில் சிபி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், சிபியின் பொறுமையை பாராட்டுகிறேன்.. அவ்ளோ அட்ராசிட்டிஸ்.. ஆனாலும் மற்றவர்களிடம் பேச முன்னெடுக்கிறார். அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார். இது எல்லாவற்றுக்கும் அவருக்கு பதில் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

அதற்கும் ஒரு எல்லையுண்டு...
மற்றொரு நெட்டிசனான இவர் சிபி சந்திரன் பொறுமையின் பவர் ஹவுஸ்... ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு... இவ்ளோ குத்தாதீங்க என்று பதிவிட்டுள்ளார்.

வச்சு செய்யணும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்போது பாவனியின் எண்ணம் நாளைக்கு நாமளும் ஏதாச்சும் சம்பந்ததே இல்லாம வச்சு செய்யணும் என்றுதான் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











