கிண்டல் பண்ணவங்க கூட நமீதா கதையை கேட்ட அழுதுடுவாங்க போல.. ஒரே நாளில் ஓஹோவான நமிதா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் ஆதரவு நமிதாவுக்கே என தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் கதை சொல்லட்டுமா டாஸ்க்கே இன்றும் தொடர்கிறது.
இதில் பேசும் நமீதா மாரிமுத்து தான் பட்ட கஷ்டங்களையும் தான் பட்ட வேதனைகளையும் அவமானங்களையும் பகிர்ந்துள்ளார்.

நமிதாவுக்கே ஆதரவு?
தனது குடும்பத்தினரே தன்னை புரிந்து கொள்ளாமல் அடித்து துன்புறுத்தியதாகவும் கதறியப்படியே கூறியுள்ளார். நமிதா மாரிமுத்து கலங்கும் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் உருகி போயுள்ளனர். தங்களின் ஆதரவு நமிதாவுக்கே என கொடி பிடித்துள்ளனர்.

அழுதுடுவானுங்க போல!
இன்றைய முதல் புரமோவில் நமிதா மாரிமுத்து கதறுவதை பார்த்த இந்த நெட்டிசன், கிண்டல் பண்ணவன்கூட நமீதா கதையை கேட்டா அழுதுடுவானுங்க போல! என பதிவிட்டுள்ளார்.

உனக்கே ஓட்டு போடுறோம்!
இன்றைய முதல் புரமோவில் நமிதா கதறுவதை பார்த்த இந்த நெட்டிசன், யம்மா!.. நமீதா மாரிமுத்து கவலைபடாதம்மா!.. மறக்காம உனக்கே ஓட்டு போடுறோம்! என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

வேற லெவல் பர்ஃபாமன்ஸ்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யம்மா.. நமீதா வேற லெவல் பர்ஃபாமன்ஸ் ... அது எப்படி.. விஜய் டிவி.. மற்றவர்கள் எமோஷன்.. விஜய் டிவிக்கு இன்கம்.. என பதிவிட்டுள்ளார்.

இது நிஜம்..
புரமோவில் நமிதா பாடிய, பெத்தவங்க பொறுப்பு இல்ல
மத்தவங்க பொறுப்பு இல்ல.. என்ற வரிகளை பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன், திருநங்கை விசயத்தில் நம்ப நம்பாட்டியும் இது நிஜம்.. நான் உங்களுக்கு வேலை கொடுக்குறேன் அப்படினு சொல்லுறவங்க ரொம்பவே கம்மி என பதிவிட்டுள்ளார்.

உடம்பே மரத்து போச்சு
பிக்பாஸ் புரமோவில் நமிதா தனது வீட்டில் தன்னுடைய அம்மா அடித்ததை உருக்கமாக கூறினார். அடி... அடி... அடி... உடம்பே மரத்து போச்சு... இந்த வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ரொம்பவே கஷ்டமானதாக இருந்திருக்கும்
மற்றொரு நெட்டிசனான இவர், நமிதா நீங்கள் உங்கள் சமுதாயத்தையே பெருமை பட வைத்துள்ளீர்கள். நீங்கள் கடந்து வந்த பாதை ரொம்பவே கஷ்டமானதாக இருந்திருக்கும். தைரியமாக இருங்கள்.. நீங்கள் தைரியமானவர்... அவரை மீடியாவுக்கு கொண்டு வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

ஆதரவு நமிதாவுக்கே
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நமிதா சொன்னது கதை இல்ல...அவங்க பட்ட வலி, வேதனை, அவமானம்.... என்றும் எனது ஆதரவு நமிதாவுக்கே என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











