இங்கீதமற்ற ஹவுஸ்மேட்ஸ்... பிக்பாஸ் புரமோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஹவுஸ்மேட்ஸ்களை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் பாவனி, சிபி மற்றும் ராஜுவிடம் ஆவேசமாக கத்துவது காட்டப்பட்டது.
அபினய்யும் பாவனியும் நெருக்கமாக பழகுவது குறித்து ஹவுஸ்மேட்ஸ் கருத்து தெரிவித்து வந்தனர். ராஜு அபினய்யிடம் பாவனியை லவ் பண்றீங்களா என்று கேட்டார். சிபி அவர்கள் இருவருக்கும் இருப்பது நட்பும் அல்ல காதலும் அல்ல வேறு ஏதோ என்றார்.

பாவனிக்கு ஆதரவு
இதையெல்லாம் வைத்து அவர்களை பாவனி ரெட்டி விளாசி தள்ளுவது இன்றைய மூன்றாவது புரமோவில் தெரிந்தது. அபினய்யுடன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசுவேன் அது என் இஷ்டம், அது என் பர்சனல் என கன்னாபின்னாவென கத்தி விட்டார் பாவனி. இதனை பார்த்த நெட்டிசன்கள் பாவனிக்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கிசு கிசு பேசுவார்கள்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி மாமியார் அபினய் மனைவி பற்றி பேசுபவர்களுக்கு, அண்ணாச்சி சிபி ராஜு வீட்டில் பெண்கள் இல்லையா, அவர்கள் டிவி பார்ப்பதில்லையா?
பொதுவாக பிக்பாஸ் வீட்டில் பெண்கள் தான் கிசு கிசு பேசுவார்கள்..
இந்த சீசனில் ராஜு மட்டும் தான் இதை தொடர்ந்து பேசுகிறார்
ராஜு உண்மையைக் கூறி முடித்து வையுங்கள்... என பதிவிட்டுள்ளார்.

எங்களுக்கு வலிக்குது
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இங்கீதமற்ற ஹவுஸ்மேட்ஸ்... நிஜமா எங்களுக்கும் வலிக்குது உன்னை இப்படி பார்க்க... உங்களுக்கு இது தேவையில்லாதது பாவனி என அவருக்கு ஆதரவாய் பதிவிட்டுள்ளார்.

வக்கிரத்தை காட்டுகிறார்கள்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒருத்தன் பேசினான்... நாமினேஷன் வந்த உடனே சாரி கேட்டான்... முதல்ல சேவ் ஆன உடனே திரும்ப பேசுறான்.. அதை பாரத்த இன்னொருத்தன், ஓ இதை பேசினா முதல்ல சேவ் ஆவோமான்னு அவனும் பேசுறான்... இன்னொருத்தர் 106 நாட்கள் கூடவே போறதுக்கு அவரும் பேசுகிறார்.. சூப்பர் கேம் பிக்பாஸ்... வக்ககிரத்தை காட்டுகிறார்கள்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தியாகி ஆக்கிட்டீங்களே..
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி அவளை அப்படியே விட்டு இருந்தா அவரே அவரை டேமேஜ் பண்ணிட்டு வெளிய போய் இருப்பார்.. தேவை இல்லாம பேசுனதையே பேசி அவரை தியாகி ஆக்கிட்டீங்களேடா என பதிவிட்டுள்ளார்.

கமல் வரை கொண்டு போய்ட்டீங்க..
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஹவுஸ்மேட்ஸ்குள்ளேயே பேசி முடிக்க வேண்டிய பிரச்சனையை இப்படி பெருசு பண்ணி இதை கமல்ஹாசன் வரை கொண்டு போய்ட்டிங்க... குட் ஜாப் ஹவுஸ்மேட்ஸ் என பதிவிட்டுள்ளார்.

கொளுத்திட்டு வந்துடுங்க..
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உட்கார வைத்து எத்தனை முறை சொன்னாலும் இவங்கள மாதிரி ஆட்களுக்குப் புரியாது! கண்ணகி மாதிரி இந்த பிக்பாஸ் வீட்ட, கூண்டோட கொலுத்திட்டு வெளிய வந்திடுங்க பாவனி என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

புயலாகி வருகிறதே..
இன்றைய மூன்றாவது புரமோவில் பாவனி ஆவேசமானதை பார்த்த இந்த நெட்டிசன், ஒ..... ஒரு தென்றல் புயலாகி வருகிறதே.....
இப்போ இந்த BGM போடுப்பா!!!! பிக் பாஸ் எடிட்டர்.....
பொருத்தமாயிருக்கும் பாவனிக்கு என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











